உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஒருபொருட் பல சொற்கள்

29. மலைவகை

45

அறை சிறுபாறை; முரம்பு சரட் பாங்கான மேட்டுநிலம்; கரடு கற்பாங்கான பெருந்திடல்; பொற்றை, பொறை, பொச்சை, பெரும்பாறை; பறம்பு சிறு குன்று; குன்று, குன்றம், கோடு சிறுமலை; குறும்பு அரணான சிறுமலை; மலை மரமடர்ந்து வளமான குன்றுக்கூட்டம்; பொருப்பு பக்கமலை; அடுக்கம் மலையடுக்கு; விலங்கல் நாட்டின் குறுக்காகவுள்ள மலை; விண்டு விண்ணளா விய மலை; ஓங்கல் உயர்ந்த மலை; சிலம்பு எதிரொலிக்கும் மலை; வரை மூங்கில் வளரும் மலை; குவடு, கோடு மலைச்சிகரம்; முடி உச்சிச் சிகரம்; கொடுமுடி உச்சிச் சிகரவுச்சி; கவான் இரு குவடுகள் சேருமிடம்; வெற்பு அடிமலை; சாரல் மலையடிவாரம்.

30. குளவகை

குளம் குளிக்கும் நீர்நிலை; தெப்பக்குளம் தெப்பத்தேர் ஓடும் குளம்; ஊருணி ஊரால் உண்ணப்படும் அல்லது ஊர்நடுவிலுள்ள குளம்; ஏரி ஏர்த்தொழிற்கு நீர்பாய்ச்சும் குளம்; கண்வாய் சிறுகால்வாயால் நீர் நிரம்பும் குளம்; தடம், தடாகம் அகன்ற அல்லது பெரியகுளம்; கயம் ஆழமான குளம்; குட்டம் குளத்தின் ஆழமான இடம்; குட்டை சிறு குளம்; குண்டு வற்றிய குளத்தில் நீர்நிறைந்த கிடங்கு; பொய்கை மலையடுத்த இயற்கையான குளம்; சுனை நீர்சுரக்கும் மலைக்குண்டு; கிணறு வெட்டப்பட்ட ஆழமான சிறுநீர்நிலை; கேணி மணற்கிணறு; கூவல் சிறுகிணறு ; துரவு சுற்றுக் கட்டில்லாத பெருங்கிணறு; மடு அருவி விழும் கிடங்கு.

31. வீட்டுவகை

வீடு நிலையான உறைவிடம்; மனை வீட்டு நிலம் (ஆட்சிப் பொருள்); இல், இல்லம் வளமான வீடு; அகம் உள்வீடு; உறையுள் தங்குமிடம்; குடிசை தாழ்ந்த சிறு கூரைவீடு; குடில் இலையால் வேய்ந்த சிறு குடிசை; குடிலம் பெருங்குடில் (பர்ணசாலை); குடிகை சிறு கோயில்; குச்சு வீடு சிறு கூரைவீடு; மச்சுவீடு மெத்தை வீடு (terrace); கூடு நெற்கூடு போல் வட்டமான சிறு வீடு; கொட்டகை சுவர் அல்லது நெடுஞ்சுவர் இல்லாத நீண்ட கூரைவீடு; கொட்டில் தொழுவம் அல்லது ஆயுதச்சாலை; சாலை பெருங்கூடம்; வளவு ஒருவருக்குச் சொந்தமான பல வீடுகள் சேர்ந்த இடம்; வளைசல் வீடு முதலியவற்றின் சுற்றுப்புறம் அல்லது சூழ்நிலம்; வளாகம் ஆதீனம்; மாளிகை மாண்பான பெருவீடு; மாடம் மேனிலை; மாடி மேனிலை வீடு; குடி ஒரு குடும்பம் அல்லது குலம் வசிக்கும் தெரு அல்லது