உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

வீட்டுத் தொகுதி; அரண்மனை அரண் அல்லது பாதுகாப்புள்ள அரசன் மனை; பள்ளி படுக்கும் வீடு; மடம் துறவிகள் தங்கும் பெருங்கூடம் அல்லது மண்டபம்.

32. அட்டில் வகை

அடுக்களை வீட்டில் அடுப்புள்ள இடம்; சமையலறை சமைப்பதற்கென்று தனியாயுள்ள அறை; அட்டில் சமையலுக்குத் தனியாயுள்ள சிறு வீடு; ஆக்குப்புரை விழாப்பந்தலில் சமையலுக்கு ஒதுக்கப்படும் இடம்; மடைப்பள்ளி கோயிலை அல்லது மடத்தைச் சேர்ந்த சமையல் வீடு.

33. சுவர்வகை

கட்டைமண்சிறு மண்சுவர்; குட்டிச்சுவர் இடிந்து நிற்கும் சிறுசுவர்; சுவர் மண்ணால் அல்லது கல்லாற் கட்டப்படும் சிறுமதி, மதில் அரண்மனை கோயில் நகர் இவற்றைச் சூழும் சூழும் உயர்ந்தகன் றுறுதியான சுவர்; எயில் பகைவரை அம்பால் எய் ய் யு ம் இடங்களையுடைய மதில்; இஞ்சி செம்பையுருக்கி வார்த்துக் கல்லாற் கட்டிய மதில்.

34. தெருவகை

முடுக்கு சிறுசந்து; சந்து தெருவின் கிளை; தெரு சிறுவீதி; மறுகு போக்குவரத்து மிகுந்த பெருந்தெரு அல்லது வீதி; ஆவணம் கடைத்தெரு; அகலுள் அகன்ற மறுகு; சாலை பெருவழி (road).

சந்தி மூன்று தெருக்கள் கூடுமிடம்; சதுக்கம் நான்கு தெருக்கள் கூடுமிடம்.

35. காலப் பெயர்

காலம் என்பது, 'பொருளிடங்காலம்' என்னுந் தொடரிற் போல் அறுவகைப் பொருளில் ஒன்றையும், 'முற்காலம்', 'தற்காலம்' எனப் பெருமுறையான காலப் பகுதியையுங் குறிக்கும்.

என

பொழுது என்பது, பெரும்பொழுது சிறுபொழுது அடையடுத்து நின்று, முறையே, இருமாத அளவான பருவ காலத்தையும் பத்து நாழிகையளவான நாட்பகுதியையுங் குறிக்கும்.

இளவேனில் முதுவேனில் கார் குளிர் முன்பனி பின்பனி என்பன, அறுபெரும் பொழுதுகள்; காலை நண்பகல் எற்பாடு மாலை யாமம் வைகறை என்பன, அறு சிறுபொழுதுகள்.

5

5. சிறு பொழுதுகள்ஆறும், முறையே காலை 6 மணி முதல் நந்நான்கு மணியளவுகள்.