உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஒருபொருட் பல சொற்கள்

47

வேளை என்பது, ‘பகல்வேளை', 'இராவேளை', 'காலை வேளை’, ‘மாலைவேளை' என நாட்பகுதியைக் குறிக்கும்.

நேரம் என்பது, மிகக் குறுகிய காலப்பெயராய், ‘அவன் வந்தநேரம் எழுதிக்கொண்டிருந்தேன்', என வினைநிகழ் சிறு காலத்தையும், 'இவ் வினை செய்ய ஒரு மணிநேரம் செல்லும்', என வினை நிகழ்கால அளவையுங் குறிக்கும்.

சமையம் என்பது, நீண்டதும் குறுகியதுமான காலப்பெயராய், ஒரு பொருள் ஒன்றற்குச் சமைந்த அல்லது பக்குவமான நிலையை மட்டும் உணர்த்தும். எ - டு : சமையம் பார்த்து வந்தான்.

அமையம் என்பது, சந்தர்ப்பம்.

,

செவ்வி என்பது, ஒருவனின் மனம் செவ்வையான அல்லது சைவான நிலை.

அற்றம் என்பது, ஒருவனது விழிப்பற்ற நிலை.

முறை என்பது, ஒரு வரிசையில் ஒருவனுக்கு ஒழுங்குப்படி ஒருவினை நிகழும் தடவை (turn). எ - டு: இருமுறை ' (two turns).

6

தரம் அல்லது தடவை என்பது, வரிசையொழுங்கில்லாமல் நிகழும் வினை நிகழ்ச்சித் தொகை. எ-டு : இருதடவை (twice, two times).

36. ஓய்வு வகை

ஒழிவு (leisure); ஓய்வு (rest, retirement); வரவு நாள் (holiday); விடுமுறை (leave).

37. உறுப்பு வகை

-

சினை உயிர்ப்பொருளின் உறுப்பு; உறுப்பு உயிர்ப்பொருள் உயிரில்லாப் பொருள் ஆகிய இரண்டிற்கும் பொதுவான உறுப்பு.

மீசைப்பெயர்:அருப்பம் புதிதாய் முளைப்பது; கரிக்கோடு கருத்த அருப்பம்; மீசை வளர்ந்தது.

38. இறகுபெயர்

தூவு அல்லது தூவி பறவையின் உடம்பிலுள்ள சிறு தூவு; இறகு சிறகிலும் வாலிலுமுள்ள பெருந்தூவு.

6. தடவை என்பதை ‘வாட்டி' என்பது வடார்க்காட்டு வழக்கு.