உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

குணப்பெயர் : இயல் இயற்கையான குணம்; இயல்பு இயற்கையான வழக்கம்; தொழுவாடு செயற்கையான வழக்கம்; பண்பு திருந்திய குணம்; குணம் உயிர்ப்பொருட்குணம்; தன்மை உயிரிகட்கும் உயிரிலிகட்கும் பொதுவான குணம்.

39. கோப நிலைகள்

கோபம் சிறிது பொழுது நிற்பது; சினம் நீடித்து நிற்கும் கோபம்; சீற்றம் சீறியெழுங் கோபம்; வெகுளி அல்லது காய்வு அல்லது உருத்திரம் நெருப்புத் தன்மையுள்ள கடுங்கோபம்; கொதிப்பு கண்போன்ற உறவினர்க்குச் செய்யப்பட்ட கொடுமை பற்றிப் பொங்கியெழுங் கோபம்; எரிச்சல் மனத்தை உறுத்துங் கோபம்; கடுப்பு பொறாமையோடு கூடிய கோபம்; கறம் அல்லது வன்மம் பழிவாங்குங் கோபம்; கறுவு தணியாக் கோபம்; கறுப்பு கருப்பன் முகம் கறுத்துத் தோன்றும் கோபம்; சிவப்பு அல்லது செயிர் சிவப்பன் முகம் சிவந்து தோன்றுங் கோபம்; விளம் நச்சுத் தன்மையான கோபம்; வெறி அறிவிழந்த கோபம்; முனிவு அல்லது முனைவு வெறுப்போடு கூடிய கோபம்; கதம் என்றும் இயல்பான கோபம்; கனிவு முகஞ்சுளிக்கும் கோபம்; செற்றம் அல்லது செறல் பகைவனை அழிக்கும் கோபம்; ஊடல் மனைவி கணவனொடு கோபித்துக் கொண்டு உரையாடாத மென்கோபம்; புலவி ஊடலின் வளர்ந்த நிலை; துனி ஊடலின் முதிர்ந்த நிலை; சடைவு உறவினர் குறை கூறும் அமைதியான கோபம்.

40. மற நிலைகள்

மறம் வீரம்; துணிவு வினை முயற்சிக்கேற்ற வீரம்; துணிச்சல் நிலைமைக்கு மிஞ்சிய வீரம்; உரன் அல்லது திடம் அல்லது திண்மை மனவுறுதி; திடாரிக்கம் தைரியம்; திண்ணக்கம் நெஞ்சழுத்தம்; தறுகண்மை இறப்பிற்கஞ்சாத வீரம்.

41. தொழில்வகை

செயல் சிறியதும் பெரியதுமாய் ஏதேனுமொரு செயல்; வினை பிறவிக்கேதுவான செயல்; தொழில் கைத்தொழில்; வேலை பிழைப்பிற்கேதுவான செயல்; அலுவல் உத்தியோகம்; கருமம் ஆள்வினைச் செயல்; கரணம் திருமணச் சடங்காகிய செயல்; கடமை கட்டாயமாகச் செய்யவேண்டிய செயல்; கடப்பாடு ஒப்புரவு அல்லது வேளாண்மைச் செயல்; காரியம் வாழ்க்கைச் செயல்; கம் அல்லது கம்மியம் ஐவகைக் கொல்லர் தொழில்; உழைப்பு மெய்வருத்தச்