உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஒருபொருட் பல சொற்கள்

49

செயல்; ஊழியம் வாணாள் முழுதும் செய்யும் வேலை (service); தொண்டு பொதுநலச் செயல்; தொழும்பு அடிமைவேலை; பணி பொருளாக்கச் செயல்; பணிக்கப்பட்ட செயல்; பணிவிடை குரவர்க்குச் செய்யும் தொண்டு; புரிவு விருப்பச் செயல்; சோலி கவனிக்க வேண்டிய சொந்த வேலை; வெட்டி வீண்வேலை; அமஞ்சி கூலியில்லாக் கட்டாய வேலை; நிகழ்ச்சி எதிர்பார்த்த நடப்பு; நேர்ச்சி எதிர்பாராத நடப்பு.

42. வினைச்சொல்

சொல்லும் வகைகள் : அசைத்தல் அசை பிரித்துச் சொல்லுதல்; அறைதல் உரக்கச் சொல்லுதல்; இசைத்தல் கோவைபடச் சொல்லுதல்; இயம்புதல் இயவொலியுடன் சொல்லுதல்; உரைத்தல் செய்யுட்கு உரை சொல்லுதல்; உளறுதல் அச்சத்தினால் ஒன்றிற் கின்னொன்றைச் சொல்லுதல்; என்னுதல் ஒரு செய்தியைச் சொல்லுதல்; ஓதுதல் காதில் மெல்லச் சொல்லுதல்; கரைதல் அழுது அல்லது அழைத்துச் சொல்லுதல்; கழறுதல் கடிந்து சொல்லுதல்; கிளத்தல் ஒன்றைத் தெளிவாய்க் குறிப்பிட்டுச் சொல்லுதல்; குயிற்றுதல் குயிற்குரலிற் சொல்லுதல்; குழறுதல் நாத்தடுமாறிச் சொல்லுதல்; கூறுதல் கூறுபடுத்துச் சொல்லுதல்; கொஞ்சுதல் செல்லப்பிள்ளைபோற் சொல்லுதல்; சாற்றுதல் அரசனாணையைக் குடிகளுக்கறிவித்தல் (proclamation); செப்புதல் வினாவிற்கு விடை சொல்லுதல்; சொல்லுதல் இயல்பாக ஒன்றைச் சொல்லுதல், நவிலுதல் பலகால் ஒன்றைச் சொல்லிப் பயிலுதல்; நுதலுதல் ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்; நுவலுதல் நூலைக் கற்பித்தல்; நொடித்தல் கதை சொல்லுதல்; பகர்தல் பகிர்ந்து விலை கூறுதல்; பலுக்குதல் உச்சரித்தல்; பறைதல் ஒன்றைத் தெரிவித்தல்; பன்னுதல் நுட்பமாய் விவரித்துச் சொல்லுதல்; பிதற்றுதல் பித்தனைப்போலப் பேசுதல்; புகலுதல் ஒன்றை விரும்பிச் சொல்லுதல்; புலம்புதல் தனிமையாய்ப் பேசுதல்; பேசுதல் உரையாடுதல் அல்லது மொழியைக் கையாளுதல்; மாறுதல் மாறிச் சொல்லுதல்; மிழற்றுதல் கிளிக்குரலிற் சொல்லுதல்; மொழிதல் சொற்றிருத்தமாகப் பேசுதல்; வலித்தல் வற்புறுத்திச் சொல்லுதல்; விள்ளுதல் வெளிவிட்டுச் சொல்லுதல்; விளம்புதல் பலர்க் கறிவித்தல்; நொடுத்தல் விலை கூறுதல்.

43. உட்கொள்ளும் வகைகள்

அசைத்தல்

விலங்குபோல் அசையிட்டுத் தின்னுதல்; அதுக்குதல் சூடான உணவை வாயின் இருபுறத்திலும் மாறிமாறி