உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பயிர்வகைச் சொற்கள்

5

தமிழ்ச்சொல் வளம்

சொல்வளம் இலக்கியச் செம்மொழிகட்கெல்லாம் பொது வேனும், தமிழ்மட்டும் அதில் தலைசிறந்ததாகும். கால்டுவெல் கண்காணியார் இதுபற்றிக் கூறுவதாவது :

'தமிழல்லாத திராவிட மொழிகளின் அகராதிகளை ஆயும்போது, தமிழிலுள்ள ஒருபொருட் பலசொல் வரிசைகள் அவற்றில் இல்லாக்குறை எந்தத் தமிழறிஞர்க்கும் மிகத் தெளிவாகத் தோன்றும். தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டுத் தமிழுக்கே சிறப்பாக வுரியனவாகக் கருதப்படும் சொற்கள் மட்டுமன்றி, தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்குரியன வாகக் கருதப்படும் சொற்களும் தமிழில் உள. எடுத்துக்காட்டாக : பேச்சு வழக்குத் தமிழில் இருப்பிடத்தைக் குறிக்கும் சொல் 'வீடு' என்பது; ஆனால், இதனொடு தெலுங்கிற்குரிய 'இல்' என்னும் சொல்லும், கன்னடத்திற்குரிய ‘மனை என்னும் சொல்லும், இனி இவற்றோடு வடமொழிக்கும் பின்னிய (Finnish) மொழிகட்குமுரிய 'குடி' என்னும் சொல்லும் தமிழகராதியிற் குறிக்கப்பட்டுச் சில சமயங்களிற் பயன்படுத்தவும் பெறுகின்றன. இங்ஙனமாகத் தமிழ் இலக்கணமும் அகராதியும், திராவிடமொழிகளின் அமைவுகட்கும் வேர்ச்சொற்கட்கும்

பொதுக்களஞ்சியமாகும்”என்பது.

ஒரு

பெரும்

('திரவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் முன்னுரை, பக். 84, 85)

தமிழ்ச்சொல் வளத்தைப் பலதுறைகளிலும் காணலாமேனும், இங்குப் பயிர்வகைச் சொற்கள் மட்டும் சிறப்பாக எடுத்துக்காட்டப் பெறும்.