உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

கிளையின் பிரிவு; போத்து சினையின் பிரிவு; குச்சு போத்தின் பிரிவு;

இணுக்கு குச்சின் பிரிவு.

காய்ந்த அடியுங் கிளையும்

சுள்ளி காய்ந்த குச்சு; விறகு காய்ந்த சிறு கிளை; வெங்கழி காய்ந்த கழி; கட்டை காய்ந்த கொம்பும் கவையும் அடியும்.

இலைவகை

இலை புளி வேம்பு முதலியவற்றின் இலை; தாள் நெல் புல் முதலியவற்றின் இலை; தோகை சோளம் கரும்பு முதலியவற்றின் இலை; ஓலை தென்னை பனை முதலியவற்றின் இலை.

கொழுந்துவகை

துளிர் அல்லது தளிர் நெல் புல் முதலியவற்றின் கொழுந்து; முறி அல்லது கொழுந்து புளி வேம்பு முதலியவற்றின் கொழுந்து; குருத்து சோளம் கரும்பு தென்னை பனை முதலியவற்றின் கொழுந்து.

கொழுந்தாடை கரும்பின் நுனிப்பகுதி.

காய்ந்த இலைவகை

சண்டு காய்ந்த தாளும் தோகையும்; சருகு காய்ந்த இலை.

இலைக்காம்பு வகை

அடி தாள் தோகை இவற்றின் காம்பு; காம்பு இலையின் காம்பு; மட்டை ஓலையின் காம்பு.

இலைநரம்பு

நரம்பு காம்பின் தொடர்ச்சியாக இலையின் நுனிவரை செல்வது; நாம்பு நரம்பின் கிளை.

பூமடல்வகை

பூ

பூ வாழை மடல்; மடல் தாழை, வாழை முதலியவற்றின் மடல்; பாளை தென்னை, பனை முதலியவற்றின் மடல்.

பூவின் நிலைகள்

அரும்பு பூவின் தோற்றநிலை; போது பூ விரியத் தொடங்கும் நிலை; மலர் (அலர்) பூவின் மலர்ந்த நிலை; வீ மரஞ்செடியினின்று பூ கீழேவிழுந்த நிலை; செம்மல் பூ வாடின நிலை.