உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்ச்சொல் வளம் அரும்புவகை

61

அரும்பு மல்லிகை முல்லை முதலியவற்றின் அரும்புபோல் சிறிதாயும் கூராயுமிருப்பது; மொட்டு அடுக்கு மல்லிகை நந்தியாவட்டம் முதலியவற்றின் அரும்புபோல் சற்றுப் பெரிதாயும் மொட்டையாயு மிருப்பது; முகை தாமரை சதுரக்கள்ளி முதலிய வற்றின் அரும்புபோல் பெரிதாயிருப்பது.

பூக்காம்புவகை

காம்பு சிறியது; தாள் அல்லது தண்டு பருமையும், மென்மையு முள்ளது; நாளம் உட்டுளையுள்ளது.

இதழ்வகை

அல்லி அகவிதழ்; புல்லி புறவிதழ்; இதழ் சிறியது; மடல் பெரியது. பிஞ்சுவகை

பூம்பிஞ்சு பூவோடு கூடிய இளம்பிஞ்சு; பிஞ்சு இளங்காய்; வடு மாம்பிஞ்சு; மூசு பலாப்பிஞ்சு; கவ்வை எட்பிஞ்சு; குரும்பை தென்னை பனை முதலியவற்றின் இளம்பிஞ்சு; முட்டுக்குரும்பை- சிறு குரும்பை; இளநீர் முற்றாத தேங்காய்; நுழாய் இளம்பாக்கு; கருக்கல் இளநெல்; கச்சல் வாழைப்பிஞ்சு.

காய்நிலைகள்

பழக்காய் பழுத்தற்கேற்ற முற்றிய காய்; கடுக்காய் முற்றிய பனங்காய்; காலக்காய் அல்லது பருவக்காய் உரிய காலத்திற் காய்ப்பது; வம்பக்காய் காலமல்லாக் காலத்திற் காய்ப்பது; கருக்காய் முற்றிய காய். குலைவகைகள்

கொத்து அவரை துவரை முதலியவற்றின் குலை; குலை கொடிமுந்திரி போன்றதின் குலை; தாறு வாழைக்குலை; கதிர் கேழ்வரகு சோளம் முதலியவற்றின் கதிர்; அலகு அல்லது குரல் நெல் திளை முதலியவற்றின் கதிர்; சீப்பு வாழைத்தாற்றின் பகுதி.

கனிவகைகள்

காய் தெங்கு பூசணி முதலியவற்றின் கனி; கனி முந்திரி நெல்லி முதலியவற்றின் கனி (கனிவாயிருப்பது); பழம் மா வாழை