உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

முதலியவற்றின் கனி (பழுப்பு நிறமானது); நெற்று வேர்க்கடலை போன்றதின் முதிர்வு; காய்ப்பழம் பழுக்கத் தொடங்கிய காய்; ஓதப்பழம் புளியின் காய்ப்பழம்.

முதிர்ச்சி வகைகள்

பழுத்தல் மா வாழை முதலியவற்றின் காய் முதிர்ச்சி. முற்றல் சுரை பூசணி முதலியவற்றின் காய் முதிர்ச்சி.

நெற்று தேங்காய் பீர்க்கு முதலியவற்றின் காய் முதிர்ச்சி. விளைச்சல் நெல் சோளம் முதலியவற்றின் கதிர் முதிர்ச்சி.

காய்கனிக் கேட்டு வகைகள்

சூம்பல் நுனியில் சுருங்கிய காய்; சிவியல் சுருங்கிய பழம்; சொத்தை புழுபூச்சி யரித்த காய் அல்லது கனி; வெம்பல் சூட்டினால் பழுத்த பிஞ்சு; அளியல் குளுகுளுத்த பழம்; அழுகல் குளுகுளுத்து நாறிய பழம் அல்லது காய்; சொண்டு பதராய்ப்போன மிளகாய்.

கோட்டான்காய் அல்லது கூகைக்காய் கோட்டான் உட்கார்ந்த தினால் கெட்ட காய்; தேரைக்காய் தேரையமர்ந்ததினால் கெட்ட காய்; அல்லிக்காய் தேரை யமர்ந்ததினால் கெட்ட தேங்காய்; ஒல்லிக் காய் ஒருவர் தமித்து இளநீர் குடித்த தென்னையிற் கெட்ட காய்.

காயின் காம்பிதழ் வகை

இதக்கை தேங்காய் பனங்காய் முதலியவற்றின் காம்பிதழ்; சொங்கு சோளத்தின் காம்பிதழ்.

பழத்தோல் வகை

தொலி மிக மெல்லியது; தோல் திண்ணமானது; தோடு வன்மையானது; ஓடு மிக வன்மையானது; குடுக்கை சுரையின் ஓடு; மட்டை தேங்காய் நெற்றின் மேற்பகுதி; உமி நெல் கம்பு முதலியவற்றின் மூடி; கொம்மை வரகு கேழ்வரகு முதலியவற்றின் உமி.

உள்ளீட்டு வகை

சாறு நீர் போலிருப்பது; சோறு கட்டிச் சோறுபோலிருப்பது; ' சதை வாழை மா முதலியவற்றின் உள்ளீடு; சுளை சீத்தா பலா

1. கத்தரி முருங்கை கற்றாழை முதலியவற்றின் உள்ளீடு சோறு எனப்படும்.