உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்ச்சொல் வளம்

63

முதலியவற்றின் உள்ளீடு; அரிசி நெல் கம்பு முதலியவற்றின் உள்ளீடு; பருப்பு அவரை துவரை முதலியவற்றின் உள்ளீடு.

கழிவுவகை

சக்கை முந்திரி எலாமிச்சை முதலியவற்றின் கழிவு; கொதக்கு புளியின் கழிவு; கூந்தை பனங்காயின் கழிவு; கோது கரும்பின் கழிவு.

விதைவகை

மணி விளைந்தது; பதர் அல்லது பதடி விளையாதது.

மணிவகை

2

கூலம் நெல் புல் (கம்பு) முதலிய தானியம்; பயறு அவரை உழுந்து முதலியவை; கடலை வேர்க்கடலை கொண்டைக்கடலை; முதலியவை; விதை கத்தரி மிளகாய் முதலியவற்றின் வித்து; காழ் புளி காஞ்சிரை முதலியவற்றின் வித்து; முத்து வேம்பு ஆமணக்கு முதலியவற்றின் வித்து; கொட்டை மா பனை முதலியவற்றின் வித்து; தேங்காய் தென்னையின் வித்து.

அவரை துவரை முதலிய பயறுகள் முதிரை என்று பெயர் பெறும். வித்து என்பது முளைக்கவைக்கும் எல்லா மணிகட்கும் பொதுப் பெயராம்.

தொலி மெல்லியது; தோல் திண்ணமானது; தோடு சற்று வன்மையானது; ஓடு மிக வன்மையானது; சிரட்டை அல்லது கொட்டாங்கச்சி தேங்காயின் ஓடு.

பதர்வகை

பதர் நன்றாய் விளையாதது; பொக்கு உள்ளீடற்றது.

பயிர்வகை

பூசணம் அல்லது பூஞ்சணம் (பூஞ்சாளம்) நொந்த சோற்றிலும் ஈரமரத்திலும் தோன்றும் நுண்பாசி; பாசம் நீர்மேலும் ஈரமுள்ள இடத்திலும் தோன்றும் பசுமையான நுண்பயிர்; பாசி நீரில் அடிவரை

2. கடலையும் பயற்றில் ஒருவகையே ; கடையப்படுவது கடலை; வறுத்தலும் கடைதலொக்கும்.