உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

படர்ந்துள்ள பாசம்; காளான் ஈரமுள்ள இடத்தில் குடைபோல் தோன்றும் பயிர்வகை; புல் அறுகு குசை போன்றவை; பூண்டு வெங்காயம் வெள்ளைப் பூண்டு போன்றவை; செடி மிளகாய்ச் செடி கத்தரிச்செடி போன்றவை; கொடி அவரைக்கொடி பாகற்கொடி போன்றவை; புதர் அடர்ந்த குத்துச்செடி; பயிர் நெல் கம்பு கேழ்வரகு போன்றவை; மரம் மா புளி போன்றவை.

கொடிவகை

இவர்கொடி ஏறிப்படர்வது (climber); படர்கொடி நிலத்திற் படர்வது (creeper).

இவர்கொடி வகை

வலந்திரி வலமாகச் சுற்றி ஏறுவது; இடந்திரி இடமாகச் சுற்றி

ஏறுவது.

மரவகை

ஆண்மரம்

காயாதது; பெண்மரம் காய்ப்பது; கோளி வெளிப்படையாய்ப் பூவாது காய்ப்பது; வயிரம் விளைந்த மரம்; வெளிறு விளையாத மரம்.

கரும்புவகை

கரும்பு கரியது; வேழம் வெளியது; இராமக்கரும்பு வெண்மையுங் செம்மையுங் கலந்தது.

நிலைத்திணை (தாவர)ப் பாகுபாடு

அகக்காழ் மா புளி போல உள்வயிரம் உள்ளவை; புறக்காழ் புல் மூங்கில் போல வெளிவயிரம் உள்ளவை.

இளம்பயிர் வகை

நாற்று நெல் கத்தரி முதலியவற்றின் இளநிலை; கன்று மா புளி வாழை முதலியவற்றின் இளநிலை; கருந்து வாழையின் இளநிலை; பிள்ளை தென்னையின் இளநிலை; குட்டி விளாவின் இளநிலை; மடலி அல்லது வடலி பனையின் இளநிலை; பைங்கூழ் நெல் சோளம் முதலியவற்றின் பசும்பயிர்.