உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்ச்சொல் வளம்

67

ஏனை யுறுப்புகளுள்ளும் செய்யப்பட்டமை முன்னர்க் காட்டப் பெற்றது.

தமிழ்நாடு எத்துணைப் பொருள்வளமுடைய தென்பது, அதன் விளைபொருள் வகைகளை நோக்கினாலே விளங்கும். பிறநாடுகளிலுள்ள கூலங்களெல்லாம் சிலவாகவும் சில்வகைப் பட்டனவாகவு மிருக்க, தமிழ்நாட்டிலுள்ளவையோ, பலவாகவும் கழிபல வகைப்பட்டனவாகவு மிருக்கின் க்கின்றன. எடுத்துக்காட்டாக, கோதுமையை எடுத்துக்கொள்ளின், அதில் சம்பாக்கோதுமை குண்டுக்கோதுமை வாற்கோதுமை முதலிய சில வகைகளேயுண்டு. ஆனால், தமிழ்நாட்டு நெல்லிலோ, செந்நெல் வெண்ணெல் கார்நெல் என்றும், சம்பா மட்டை கார் என்றும் பலவகைகள் இருப்பதுடன், அவற்றுள் சம்பா குண்டுச்சம்பா குதிரைவாலிச்சம்பா சிறுமணிச் சம்பா சீரகச்சம்பா முதலிய அறுபது உள்வகைகள் உள்ளன. இவற்றோடு, வரகு காடைக்கண்ணி குதிரைவாலி முதலிய சிறு கூலங்கள் தமிழ்நாட்டிலன்றி வேறெங்கும் விளைவ தில்லை. தமிழ்நாட்டுள்ளும் தென்னாட்டிலேயே அவை விளைகின்றன. பழங் காலத்தில் விளைந்த அளவு பொன்னும் மணியும் முத்தும் பவழமும் இன்று விளையாவிடினும், அருமையான கூலங்களும் சிறு கூலங் களும் இன்றும் தென்றமிழ் நாட்டில் விளைந்து வருவது கண்கூடு.

ஒரு நாட்டு வளத்திற்குத் தக்கபடியே, அந்நாட்டு மக்களின் அறிவொழுக்கங்களும் அமைந்திருக்கும். வளத்தினால் மக்கள் திருந்துவதும் வறத்தினால் அவர்கள் கெடுவதும் இயல்பு.

“எவ்வழி ஆடவர் நல்லவர்

அவ்வழி நல்லை வாழிய நிலனே"

என்று ஔவையார் கூறினாரேனும்,

எவ்வழி நல்லை நிலனே

அவ்வழி வாழும் ஆடவர் நலரே

(புறம்.187)

என்று அதை மாற்றுவதே இயற்கைக்குப் பொருத்தமாம். மருதநில மக்களினும் முல்லைநில மக்களும், முல்லைநில மக்களினும் குறிஞ்சிநில மக்களும், குறிஞ்சிநில மக்களினும் பாலைநில மக்களும், கொடியராயிருப்பதை இன்றும் காண்கிறோம். ஆதலால் நிலத்தின் பான்மையால் மக்கள் மனப்பான்மை திரியுமேயன்றி, மக்கள் மனப்பான்மையால் நிலத்தின் மனப்பான்மை திரிவதன்று. தமிழ்நாட்டின் தனிப்பெரு வளத்தினாலேயே, பண்டைத்