உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

நிலவகை

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

புறம்போக்கு பண்படுத்தப்படாத அரசியலார் நிலம்; தரிசு பயிர் செய்யப்படாது புல் முளைத்துக்கிடக்கும் நிலம்; சிவல் சிவந்த நிலம்; கரிசல் களிமண் நிலம்; முரம்பு கன்னிலம் அல்லது சரள்நிலம்; சுவல் மேட்டு நிலம்; அவல் பள்ளமான நிலம்.

நன்செய் வகை

வயல் வைத்துப் போற்றப்படும் நிலம்; கழனி போரடிக்கும் களமுள்ள வயல்; பழனம் பழைமையான வயல்; பண்ணை பள்ளமான வயல்; செறு சேறு செய்யப்பட்ட வயல்.

வேலிவகை

இடுமுள்வேலி இடப்பட்ட காய்ந்த முள்வேலி; வாழ் முள்வேலி வளரும் முட்செடியும் முள்மரமும் உள்ள வேலி.

காட்டுவகை

மிளை அல்லது இளை காவற்காடு; இறும்பு குறுங்காடு; வல்லை பெருங்காடு; முதையல் பழங்காடு; பொச்சை கரிந்த காடு.

ங்ஙனம் பொருள்களின் வகைகளெல்லாம் தமிழில் தனித்தனி பெயர் பெற்றுள்ளன. இனி ஒரே பொருள் பல பெயர் பெறுவதுமுண்டு. எ - டு : வாளவரை, பாடவரை, சாட்டையவரை, தம்பட்டவரை.

இதுகாறுங் கூறியவற்றால், தமிழ் சொல்வளமுடைய தென்றும், தமிழர் மதிவளமுடையரென்றும், தமிழ்நாடு பொருள் வளமுடைய தென்றும், தெள்ளிதின் விளங்கும்.

ஒரு மொழி பொதுமக்களாலும் அதன் இலக்கியம் புலமக்க ளாலும் அமையப்பெறும். தமிழ்ப் பொதுமக்கள் எங்ஙனம் உயர்ந்த பகுத்தறிவுடையர் என்பது முன்னரே மெய்ப்பொருட் சொற்களைப் பற்றிய கட்டுரையில் விளக்கப்பெற்றது. எத்துணையோ ஆராய்ச்சி நடந்துவரும் இக்காலத்திலும், எத்துணையோ மொழிகளினின்று கடன் கொண்ட ஆங்கில மொழியிலும் நூலிலும், இலையைக் குறிக்க (leaf) என ஒரே சொல் உளது. ஆங்கிலப் பயிர் நூலாசிரியரும், வேறு பல வகைகளில் இலைகளைப் பாகுபாடு செய்தனரேயன்றி, தமிழ்ப் பொதுமக்களைப் போல வன்மை மென்மைபற்றித் தாள் இலை தோகை ஓலை எனப் பாகுபாடு செய்தாரில்லை. இத்தகைய பாகுபாடு