உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

என்பது அரசனுடைய அரண்மனையையும் குறித்தன. பின்னர், கடவு ளுணர்ச்சி யேற்பட்டபின் அவை இரண்டும் முறையே கடவுளையும் அவரிருக்கையாகக் கருதப்படும் வீட்டையும் குறித்தன.

தொண்டன் அடியான் என்ற பெயர்களும், முதலாவது மக்கட்குத் தொண்டும் அடித்தொழிலும் செய்தவர்களைக் குறித்து, பின்னர், கடவுள் தொண்டரையும் கடவுளடியாரையும் குறித்தன. தொண்டன் என்னும் பெயர், இன்று பொதுநல ஊழியனையுங் குறிக்கும்.

களிப்பு என்னுஞ் சொல், முதலாவது, கள்ளுண்டலையே குறித்து, பின்பு கள்ளுண்டு மகிழ்தலையும், அதன்பின் இன்பத்தால் மகிழ்தலையும் குறித்தது.

மேற்காட்டிய ஐஞ்சொற்களும், முதலாவது தாழ்ந்த பொருள் களைக் குறித்து, பின்னர் உயர்ந்த பொருள்களைக் கொண்டமை காண்க. ங்ஙனம், சொற்பொருள் உயர்வதே உயர்பு எனப்படும்.

2. இழிபு (Degradation)

உயர்பிற்கு நேர்எதிர் இழிபு எனப்படும்.

கடவுள் என்னும் பெயர், மனமொழி மெய்களையும் எல்லா வற்றையுங் கடந்த கடந்த முழுமுதற் கடவுளையே குறிக்க எழுந்த சொல்லென்பது, அதன் பகுதியாலேயே விளங்கும். கடவுட்டன்மை யடைந்த முனிவர்களை இல்லறப் பொதுமக்கள்கடவுள் என்றழைத்த பின், கடவுள் என்னும் சொற்பொருள் இழிந்துவிட்டது. பகவன் என்னும் சொல்லும் இங்ஙனமே கடவுளைமட்டும் குறித்த நிலையில் உயர்ந்ததாயிருந்தது. பின்னர் முனிவனை அல்லது முனிவற் போலியைக் குறிக்க ஆளப்பட்டபின், இழிவடைந்துவிட்டது. இதனாலேயே, முழுமுதற் கடவுளை ‘ஆதி’ என்னும் அடைகொடுத்து ‘ஆதிபகவன்' என அழைத்தார் திருவள்ளுவர்.

,

தம்பிரான் என்னும் கடவுட்பெயர், துறவை மேற்கொண்ட மடத்தலைவரைக் குறிப்பதும் மேற்கூறிய முறையே.

பெயர்.

அந்தணர் என்பது அழகிய குளிர்ந்த அருளையுடைய முனிவர்

“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்”

(குறள்.30)