உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொருள்திரி சொற்கள்

85

என்றார் திருவள்ளுவரும். இச் சொல் அந்தணர்போல்வாரையும், அடியாரையும், பூசாரிகளையும் படிப்படியாய்க் குறித்து, இன்று ஒரு குலத்தாரையுங் குறிக்கின்றது.

பண்டாரம் என்பது பல பொருள்கள் நிறைந்த சரக்கறைப் பெயர். அது முறையே, பல அறிவுப் பொருள்களை உள்ளத்தில் தொகுத்துவைத்த பேரறிஞனையும், அப் பேரறிவு காரணமாக உலகப்பற்றைத் துறந்த துறவியையும், அத்துறவிபோலக் கோலம் பூண்டவனையும், அக் கோலம் பூண்ட இரப்போனையும் குறித்தது.

‘எங்கள் பாண்டிப்பிரான் தன் அடியார்க்கு மூல பண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினே” என்னும் திருவாசகத் தொடரிலும் (36 : 5) “பண்டாரங் காமன்படை யுவள்கண் காண்மின்” என்னும் பரிபாடல் தொடரினும் (11: 123) ‘பண்டாரம்' என்னும் சொல் பொக்கிசத்தையும் பொக்கிசசாலையையும் குறித்தமை

காண்க.

ஞ்சியத்தைப் பண்டாரம் என்பதும், நூல்நிலையத்தைக் கலைமகள் பண்டாரம் என்பதும் உலக வழக்கு. சைவமடத் தலைவரைப் பண்டாரம் என்பது, அவர் பேரறிவு வாய்ந்த துறவி என்னும் காரணம் பற்றியே.

பண்டாரம் பரதேசி என்னும் இணைமொழி வழக்கில் பண்டாரம் என்பது துறவுக்கோலம் பூண்ட இரப்போனைக் குறித்தல் காண்க.

ஆள்வான், ஆளுடையான், ஆட்கொண்டான், ஆளவந்தான், ஆண்டவன், ஆண்டான், ஆண்டி, ஆண்டை என்பன ஒரே பெயரின் பல்வேறு வடிவங்களாகும். ஆண்டி என்னும் சொல், முதலாவது கடவுளையும், பின்பு அவனருள்பெற்றதுறவியையும் ′ அதன்பின் போலித் துறவியான இரப்போனையும், அதற்கும் பின் ஏழையையும் குறித்தது. பழனியாண்டி, மடத்தாண்டி, கோவணாண்டி, ஓட்டாண்டி முதலிய வழக்குகளை நோக்குக.

பரதேசி என்பது சுதேசி (சுவதேசி) என்பதற்கு எதிர். அது முதலாவது அயல்நாட்டானைக் குறித்தது; பின்பு அயல்நாட்டு அல்லது அயலூர் ஏழையைக் குறித்தது; இன்று இரப்போனைக்

1. ஆழ்வார் என்னும் பெயர்; ஆள்வார் என்பதின் திரிபென்பர் பெரும்புலவர் மு.இராகவையங்கார்.