உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

குறிக்கின்றது. ‘பண்டாரம் பரதேசி', 'அரதேசி பரதேசி' முதலிய வழக்குகளை நோக்குக.

பத்தினி என்பது பத்தன் என்பதன் பெண்பால் வடிவம். பத்தன் என்னும் ஆண்பால் வடிவம் போன்றே, பத்தினி என்பதும் முதலாவது தேவபத்தினியைக் குறித்தது. பின்னர், 'குலமகட்குக் கொழுநனே தெய்வம்’ என்னும் புரைபட்ட கருத்து மக்கள் உள்ளத்திற் புகுந்தபின், மாந்தனான கணவன்மாட் டன்புடையாளைக் குறித்து வருகின்றது.

ஆண்டிலும் அறிவிலும் தாழ்ந்த சிறுவன் சிறுமியைப் பயலும் சிறுக்கியும் என்பது உலகவழக்கு. பயல் என்பது பையல் (பையன்) என்பதன் மறுவடிவம். சிறுக்கி என்பது, சிறுக்கன் (சிறுவன்) என்பதன் பெண்பால். இவ்விரு பெயர்களும், முதலாவது இளமை யொன்றே குறித்தனவாயினும், இன்று இளமையோடு இழிவும் சேர்த்துக் குறிப்பனவாகும்.

பட்டப்பெயர் என்பது, முதலாவது, 'அருண்மொழித்தேவன்', 'உத்தம சோழப் பல்லவன்', 'தருமசேனன்' முதலிய பட்டங் குறித்த உயர்வுப்பெயர்களையே குறித்தது. ஆயின், இன்றோ, அது நகையாளரும் பகையாளரும் பழிப்பதற்கிடும் இழிவு பெயர்களையே குறிக்கின்றது.

ப்

திருவாளன் என்பது திருமாலின் பெயர்களுள் ஒன்று. அது பின்பு செல்வமுள்ளவனையும் மதிப்புள்ளவனையுங்

குறித்தது. ன்றோ அது 'Mr.' என்னும் ஆ ங்கில மதிப்படை போல ஒவ்வொருவன் பெயர்க்கு முன்னரும் சேர்க்கப்படுகிறது.

என்னும்

திருமால் திருவருள் என்பவற்றிற்போல, திரு அடைமொழியைத் தனிப்படக் கூறினும், அது தெய்வத்தன்மை குறிப்பதாகும். ஆனால், திரு என்பதன் வடமொழித்திரிபான ஸ்ரீ என்பதுடன் பற்பல உயர்வு குறித்த சொற்களை அடுக்க அடுக்க, அது இழிவுசிறக்கின்றது. இதற்குக் காரணம் குறிக்கப்படும் பொருளின் தகுதியின்மையே. சிறுவனை அண்ணாத்தை என்றும், நரியை நரியனார் என்றும் அழைத்தால் எங்ஙனம் அவ் வழைப்புத் தகாதோ, அங்ஙனமே உயர்வுச் சொல்லடுக்கிய ஸ்ரீ என்பதும் என்க. மதிப்பும் மதிப்புடைய பொருளும் மதிக்கத்தக்க இடத்திலேயே மதிப் படையும்; இன்றேல் அதற்கெதிரான பயனே விளையும். நாய்க்குப் பீடமும், நரிக்கு முடியும், பன்றிக்கு முகபடாமும், விளக்கு மாற்றுக்குப் பட்டுக்குஞ்சமும் எங்ஙனம் பொருந்தாவோ, அங்ஙனமே மதிப்பில்லாத இடத்திற்கு மதிப்புடைச் சொற்கள் பொருந்தா.