உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொருள்திரி சொற்கள்

87

கடவுள் பெயர்க்குமுன் ஸ்ரீ என்றும், அரசன் பெயர்க்குமுன் ராஜஸ்ரீ என்றும், சிற்றரசன் பெயர்க்கு முன் ராஜ ராஜஸ்ரீ என்றும், செல்வன் பெயர்க்கும் வறியன் பெயர்க்கும் முன் மகாராஜ ராஜஸ்ரீ என்றும், மதிப்படைகள் வழங்குதலையும், மக்கள் இழிவுபற்றி அவர்கள் பெயர்க்குமுன் வழங்கும் மதிப்படைகளும் இழிவடைந் துள்ளமையையும் நோக்குக!

தொல்காப்பியர் காலத்தில், தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் விளிக்கத்தக்க எல்லா' என்றொரு பொதுப்பாற் சொல் வழங்கி வந்தது.

'முறைப்பெயர் மருங்கில் கெழுதகைப் பொதுச்சொல் நிலைக்குரி மரபின் இருவீற்றும் உரித்தே”

என்பது தொல்காப்பியம். இதற்கு,

(பொருளியல்,220)

'முறைப்பெயரிடத்து இருபாற்கும் பொருந்தின தகுதியுடைய எல்லா வென்னுஞ் சொல், புலநெறி வழக்கிற்குரிய முறைமையி னானே வழுவாகாது ஆண்பாற்கும் பெண்பாற்கும் உரியதாய் வழங்கும் என்றவாறு”

‘கெழுதகை’ என்றதனானே தலைவியும் தோழியும் தலைவனைக் கூறியதே பெரும்பான்மை யென்றும், தலைவன் தலைவியையும் பாங்கனையுங் கூறுதல் சிறுபான்மை வழுவமைதி யென்றுங் கொள்க.

(எ-டு)

“அதிர்வில் படிறெருக்கி வந்தென் மகன்மேல்

எதிர்வளி நின்றாய்நீ செல்;

இனி யெல்லா"

(கலித்.81)

எனத் தலைவியைத் தலைவன் இழித்துக் கூறலின் வழுவாயமைந்தது.

"எல்லா நீ

என்நீ பெறாததீ தென்”

(கலித்.61)

எனத் தோழி தலைவனை விளித்துக் கூறலின் வழுவாயமைந்தது.

2. இது Hallo என்னும் ஆங்கிலச் சொல்லை ஒத்தது.