உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

"எல்லா விஃதொத்தன்” (கலித். 61) என்பது பெண்பால்மேல் வந்தது. ஏனைய வந்துழிக் காண்க. ‘பொதுச்சொல்' என்றதனானே எல்லா, எலா, எல்ல, எலுவ எனவும் கொள்க.

"எலுவ சிறாஅர்”

என வந்தது.

குறுந். 129)

6

“யாரை யெலுவ யாரே”

(நற்.395)

எனத் தலைவனைத் தோழி கூறினாள்.

“எலுவி யென்பது பாலுணர்த்தலின் ஆராயப்படா” என வுரைத்தார் நச்சினார்க்கினியர்.

எல்லா என்னும் விளி இருபாற் பொதுவாகவே வழங்கி வந்த தெனினும், அதன் திரிபு நிலையில் எலுவன் என்னும் ஆண்பால் வடிவமும், எலுவி என்னும் பெண்பால் வடிவமும் தோன்றின.

எல்லா என்னும் சொல், இன்று தென்னாட்டில் ஏல ஏலா எலே என்னும் வடிவுகளில் ஆண்பால் விளியாகவும், ஏழா என்னும் வடிவில் பெண்பால் விளியாகவும், வழங்கி வருகின்றது.

ஏழு- ஏடன்- தோழன், ஏடி- தோழி- ஏடன் என்னும் வடிவம், ஏட ஏடா ஏடே, அட அடா அடே என்று திரிந்து ஆண்பால் விளியாகவும்; ஏடி ஏடீ, அடி அடீ எனத் திரிந்து பெண்பால் விளியாகவும் தமிழ்நாடெங்கும் வழங்கி வருகின்றது. அடடா அடட என்பன அடுக்கு.

அட என்பது அரா ரா என்றும், அடே என்பது அரே ரே என்றும் தெலுங்கில் வழங்கிவருகின்றது. இவற்றுள் ரா ரே என்னும் சிதைவுகள் இந்தியிலும் உருதுவிலும் வழங்கிவருகின்றன.

இங்ஙனம் தமிழின் தாய்மையை யுணர்த்தும் எல்லா என்னும் சொல், முதலில் தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் மதிப்பாய் விளிக்கும் விளியாயிருந்தது, இன்று அடிமையரையும் கீழ்மக்களையும் விளிக்கும் இழிவுச்சொல்லாய் வந்துளது.

சேரி என்பது, பல வீடுகள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் குடியிருப்பு. முதற்காலத்தில் முல்லை நிலத்தூர்கள் சேரி என்னும் பொதுப்பெயர் பெற்றன. முல்லைநில மக்கள்

நகர்ப்புறத்துள்ள

டையர்

டையராதலின்,

குடியிருப்பு

மருதநில புறஞ்சேரி