உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

கல்விச்சாலைகள் பெரும்பாலும் மடங்களிலிருந்து வந்தமை யால், பள்ளி என்னும் சொல் கல்விச்சாலையையுங் குறித்தது. 'பள்ளிக்கூடம்', ‘பள்ளிப்பிள்ளை', 'பள்ளிக்கு வைத்தல்' முதலியன உலக வழக்கு. எழுத்துப்பள்ளி என்பது மலையாள (சேர) நாட்டு வழக்கு.

மடங்கள் பெரும்பாலும் கோவில்களைச் சேர்ந்திருந்தமை யாலும், அங்ஙனம் சேராத மடங்களுள்ளும் கோவில் இருந்தமை யாலும், கோவில் கடவுள் வீடாதலாலும், பள்ளி என்னும் சொல் கோயிலையுங் குறிக்கும்.

சமண புத்தமதக் கோவில்கள் மடத்தோடு சேர்ந்திருந்தமை யாலேயே, பொதுவாய்ப் பள்ளியெனப்பட்டன. மசூதிகளும் மடம்போன்றவை என்னுங் காரணத்தால் பள்ளிவாசல் எனப்படும்.

“கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல்"

(குறள். 844)

என்னுங் குறட்கு, 'சான்றோரவையின்கண் பேதையாயினான் புகுதல், தூயவல்ல மிதித்த காலை இன்பந்தரும் அமளிக்கண்ணே வைத்தாற் போலும்.

‘கழுவாக்கால்' என்பது இடக்கரடக்கு; அதனால் அவ் வமளியும் இழிக்கப்படுமாறுபோல, இவனால் அவ்வவையும் இழிக்கப்படும் என்பதாம்” என்று உரைகூறினார் பரிமேலழகர்.

சான்றோர் அவை திருமுன்னிலைபோலத் தெய்வத் தன்மை யுடையதாய்க் கருதப்படுவதால், பள்ளி என்பதற்குப் படுக்கை என்று பொருள் கொள்ளாமல் கோவில் என்று பொருள் கொள்வதே பொருத்தமாம்.

படுக்கும் வீடே ஒருவனுக்கு நிலையான இடமாதலால் பள்ளி என்பது நிலையான இடத்தைக் குறித்துப் பின்பு அக் கருத்தை அடிப் படையாகக் கொண்டு இடத்திற்கே பொதுப் பெயராயிற்று.

“எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து சொல்லிய பள்ளி எழுதரு வளியின்”

என்று தொல்காப்பியர் கூறுதல் காண்க.

(பிறப்பியல், 20)

துரை என்பது, துர என்னும் பகுதியடியாகப் பிறந்து, தலைவன் அல்லது சிற்றரசன் என்று பொருள்படும் கொடுந்தமிழ்ச்சொல். துரத்தல் செலுத்துதல் அல்லது நடத்துதல். மேனாடுகளிலிருந்து இங்கு