உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்றொடரியல்

ii. திசை வழக்கு (Provincialism)

85

சில பொருள்கட்கு வெவ்வேறு திசைகளில், அல்லது இடங்களில், வெவ்வேறு சொற்கள் அல்லது சொற்றொடர்கள் வழங்கி வருகின்றன. அவ்வவ் விடங்களில் அவ்வவ் வழக்கையே தழுவல் வேண்டும்.

எ-டு: நெல்லை : காணாமற் போயிற்று தொலைந்து போயிற்று, பதநீர்

தஞ்சை : கெட்டுப்போயிற்று, பதநீர்

சென்னை : காணாமற் போயிற்று, பனஞ்சாறு வடார்க்காடு : தாரைவார்ந்து போயிற்று, தெளிவு

iii. இழிவழக்கு (Slang Usage)

அடித்துக் கொளுத்திவிட்டான், வெளுத்து வாரிவிட்டான், அலசிவிட்டான், கம்பியை நீட்டிவிட்டான், அந்தப் பருப்பு இங்கே வேகாது என்பன போன்ற இழிவழக்குச் சொற்றொடர்களை விலக்கல் வேண்டும்.

iv. அயல்வழக்கு (Foreign Idioms)

சில மாணவரும் பெரியோரும் ஆங்கில வழக்கைத் தழுவித் தமிழ் பேசுகின்றனர். தமிழுக் கொவ்வாத இடமெல்லாம் அது வழுவாகும்.

பிழை

திருத்தம்

விளையாட்டில் நன்றாய்ச்

நன்றாய் விளையாடினார்கள்.

செய்தார்கள்.

பயிற்சி எடுக்கவேண்டும்.

பயிற்சி செய்யவேண்டும்.

எல்லாரும் இக் கொண்டாட்டத்திற் எல்லாரும் இக் கொண்டாட்டத்தைச்

பங்கெடுக்க வேண்டும்.

சேர்ந்து நடத்த வேண்டும்.

அறிவிப்புக்கொடு

அறிவி

உண்ணுங்கள்

உணவெடுத்துக்கொள்ளுங்கள்

V. சார்ச்சி (உபசார) வழக்கு (Transfered Epithet or Appanage)

உடையவன் குணத்தை அல்லது செயலை உடைமையின்மே லேற்றிக் கூறுவது ஏற்றுரை வழக்காம்.

எ - டு : ‘மறத்தண்டு; ஆக்கமான வீடு