உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

அணியியல் - RHETORIC

ஒரு பொருளைப் பற்றி அழகாகவும் பொருள்வலிமையோடும் உரைப்பதும் எழுதுவதும் அணியாகும். அது சொல்லணி பொருளணி என இருவகைப்படும்.

1. சொல்லணி (Figures of speech relating to sound)

சொல்லணி எழுத்தும் சொல்லும்பற்றியது. அது மோனை (Alliteration), எதுகை (Rhyme), மடக்கு (Pun), பின்வருநிலை (Anaphora) முதலியவாகப் பல வகைப்படும்.

எ - டு : திங்கட் கிழமை திருநாவுக்கரசு திரும்பி வந்தான் - மோனை, கோனார் போனார், எங்களூர் பெங்களூர் - எதுகை.

அரவம் அரவம் அறியும் - மடக்கு

'அறிவார் அறிவார்? அறிவார் அறிவார்' - பின்வருநிலை. “ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்” - இரட்டுறல் (Equivocation or Ambiquity).

மேலை விடையூதியர் தாழ்த்தப்பட்டோர்க்குச் செய்த பெரு நன்மையை மறுக்கவோ மறைக்கவோ மறக்கவோ முடியாது - ஒலிப்போலி (Assonance)

இங்ஙனமன்றிச் செயற்கையாய் அமைக்கும் மோனை யெதுகை முதலியவை சிறந்தனவல்ல.

2. பொருளணி (Figures of speech relating to sense)

பொருளணி பொருள்பற்றியது. அது பலவகைப் படும். அவற்றுள் கட்டுரைக்கு வேண்டியவாவன: