உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




104

1) தன்மையணி

கட்டுரை வரைவியல்

தன்மையணியாவது ஒரு பொருளைப்பற்றி உள்ளவாறே சிறப்புத் தோன்றக் கூறல்.

எ - டு : குறுகுறு நடந்து சிறுகையா லள்ளிச் சிந்தியும் சிதறியும் துழவியும் சோற்றையுண்ணும் புன்றலைச் சிறார்.

2) உவமை (Simile)

உவமையணியாவது இரு பொருட்கு ஏதேனுமொரு வகையில் ஒப்புமை கூறல்.

எ - டு : கல்வியறிவோடு சொல்வன்மையு மிருப்பின், அது பொன் மலர் மணம் பெற்றது போலாம்.

உவமையாகுபெயர்:

எ-டு : கோடரிக்காம்புகள் - காட்டிக் கொடுப்பவர். எருமையர் உணர்ச்சியற்றவர்.

உவமைக் கதை (Parable), உவமை நாடகம் (Allegory) என்பனவும் ஏற்றவிடத்திற் பயன்படுத்தலாம்.

3) உருவகம் (Metaphor)

உருவகவணியாவது உவமைக் குறிப்பை அடிப்படையாகக் கொண்டு ஒரு பொருளை இன்னொரு பொருளாகக் கூறல்.

எ-டு: செங்குட்டுவனாகிய யாளி கனகவிசயராகிய யானைகளின் மேற்பாய்ந்தது. கல்வி யென்ற பயிருக்குக் கண்ணீரென்ற மழை வேண்டும். இறைவன் திருவடிப் புணையைத் துணைக்கொண்டு பிறவிக்கடலைக் கடக்க வேண்டும்.

4) வேற்றுமை

வேற்றுமை யணியாவதுபல பொருள்களை வேறுபடுத்திக்

கூறுவது,

எ-டு : பெரியோர் பிறர் குணங்களையே எடுத்துப் போற்றுவர்; சிறியோர் பிறர் குற்றங்களையே எடுத்துத் தூற்றுவர்.

5) சுவையணி

சுவையணியாவது ஒரு பொருளைப்பற்றி நகை அழுகை இளிவரல் (இழிவு) மருட்கை (வியப்பு) முதலிய உளச்சுவை (உணர்ச்சி)கள் தோன்றக் கூறுவது.