உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அணியியல்

105

எ-டு : நன்றியறிவில்லா மக்கள் மனிதவுடம்பு பெற்றும், நாயினும் கடைப்பட்டவரன்றோ? (இளிவரல்)

6) விரலணி

விறலணியாவது சுவையினால் உடம்பின் புறத்துத் தோன்றும் குறிப்புகளை எடுத்துக் கூறுவது.

எ-டு: இந்தி கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டதை அறிந்தவுடன் இளசைகிழார் சோமசுந்தர பாரதியார்க்குக் கண் சிவந்தது; மீசை துடித்தது; மயிர் சிலிர்த்தது; தம் உதட்டைக் கடித்து வஞ்சினங்கூறி உரறினார்.

7) வஞ்சப் புகழ்ச்சி (Irony)

வஞ்சப் புகழ்ச்சியாவது ஒரு பொருளைப் புகழ்வது போலப் பழித்தல்.

எ-டு : இளங்கோவன் என்னும் மாணவனுக்கு இப் பள்ளிக் கூடத்தினிடத்து அளவிறந்த பற்றிருப்பதினால், இதிற் சேர்ந்து இருபதாண்டாகியும் இன்னும் இதனின்று வெளியேற விருப்பமில்லை.

8) புகழாப் புகழ்ச்சி

ஒருவரைப் பழிப்பதுபோலப் புகழ்தல் புகழாப் புகழ்ச்சி யாகும். எ-டு: சிரித்துக் கெடுத்தான் சிவன். “எனது ஒருவாய்க்குக் கஞ்சியில்லாமல் தானனிடத்தில் இரக்க, அவன் கூட ஒரு நால்வாயை (யானையை)க் கொடுத்து என்னைக் கெடுத்து விட்டான். - அந்தகக் கவி வீரராகவர்.

9) அங்கதவணி (Censure or Sarcasm)

ஒரு செய்தியை வெளிப்படையாயேனும், குறிப்பாயாயேனும் கண்டித்துக் கூறல் அங்கதவணியாம்.

எ - டு : “ஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன” - வெளிப்படை எ-டு:

பேச்சுரிமை யில்லையென்னும் இக்காலத்தில் பாட்டுரிமை மிகுந்துவருவது மிக வருந்தத்தக்கது. - குறிப்பு

10) உயர்வுநவிற்சி (Hyperbole or Exaggeration)

உயர்வுநவிற்சியாவது ஒரு பொருளைப்பற்றி அறிஞர் ஒப்புக்கொள்ளும் அளவில் உயர்த்திக் கூறுவது.