உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




106

கட்டுரை வரைவியல்

எ-டு : சிலப்பதிகாரத்தில் ஒவ்வொரு சொல்லும் தேன் சொட்டும். திருவாசகத்திற் குருகார் ஒரு வாசகத்திற்கு முருகார்.' 'கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்'.

11) பிறிதுமொழிதல்

பிறிதுமொழிதலாவது உவம (உவமான)த்தை மட்டும் கூறி, உவமிய (உபமேய)த்தை அறிந்துகொள்ள வைப்பது.)

எ - டு : ‘குறைகுடம் கூத்தாடும், நிறைகுடம் நிலைநிற்கும்’

12) தற்குறிப்பேற்றம்

தற்குறிப்பேற்றமாவது இயற்கையாய் நிகழும் நிகழ்ச்சிக்கு ஒருவன்

வேறொரு காரணங் கற்பித்துக் கூறல்.

எ - டு : வண்டு பாட, மலர் தேனளித்தது.

எ-டு

13) ஒழித்துக்காட்டணி

ஒழித்துக்காட்டணியாவது, ஒரு பொருளைப் புகழும் போது, தீமைக்கும் நன்மைக்கும் பொதுவான குணத்தை நன்மைக்கே யுரியதாகக் கூறுவது.

எ-டு: நிடத நாட்டில் வில்லே கோணியிருக்கும்.

14) வேற்றுப்பொருள் வைப்பணி

ஒரு செய்தியை அல்லது நிகழ்ச்சியைக் கூறி, அதன் இறுதியில், அதிலிருந்து படித்துக் கொள்ளும் படிப்பினையாகிய உண்மையை அல்லது நீதியைக் கூறுவது வேற்றுப் பொருள் வைப்பாம்.

எ-டு : பண்டிதர் (Dr.) அரங்காச்சாரியாரால் அறுப்பு மருத்துவம் செய்யப்பெற்றவரும் இறந்துபோவ துண்டு. விதியை யார் வெல்ல முடியும்?

15) முரண் அணி

பொருள்களை முரண் (மாறுபாடு) படக் கூறுவது முரண் அணியாம். அது நான்கு வகைப்படும்.

i. எதிர்நிலை முரண் (Oxymoron)

எ-டு: மெய்யான பொய், இது அதினும் சிறிது பெரிது, கற்றமூடன், ஆண்மையுள்ள பெண், வெளிப்படைக்களவு.