உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அணியியல்

ii.ஒருபொருள் முரண் (Epigram)

107

எ-டு : அவன் ஆண்டில் இளைஞன், அறிவில் முதியன்; அன்பீனுங் குழவி அருள்; பேரில் கறுப்பன், நிறத்தில் சிவப்பன், கீர்த்தியில் வெளுப்பன்.

iii. பல்பொருள் முரண் (Antithesis)

எ-டு: 'காலையு மாலையுங் கைகூப்பிக் கால் தொழுதால்”

iv. எதுகை முரண் (Paronomasia)

எ - டு : ஆய்வள்ளல் கொடைமடம் படுவானேயன்றிப் படைமடம் படான்.

நூல்களைத் தேற்றும் (படித்தறியும்) புலவரும் வேறு; போற்றும் (படியாமற்பேணும்) புலவரும் வேறு.

16) காட்சியணி (Vision or Historic Present)

ஓர் இறந்தகால அல்லது எதிர்கால நிகழ்ச்சியை இன்று நிகழ்வதுபோலக் கூறுவது காட்சியணியாம்.

எ-டு: கெசெமனேத் தோட்டத்தில் இயேசுதம் மாணவரை (சீடர்களை) விட்டுத் தனித்திருந்து தம் தந்தையாரிடம் வேண்டுதல் செய்கிறார்; மாணவர்கள் தூங்குகிறார்கள்; இயேசு அவர்களைத் தட்டி எழுப்புகிறார்;ஒரு பெரும் பகைக் கூட்டம் வருகிறது; யூதாசு இயேசுவைக் காட்டிக் கொடுக்கிறான்;பகைவர் இயேசுவைப் பிடிக்கிறார்கள்; உடனே பேதுரு தலைமைப் பூசாரியனின் வேலைக்காரன் காதைப் பட்டயத்தால் வெட்டுகிறான்.

17) ஆட்படையணி (Personification)

ஓர் அஃறிணைப் பொருளை உயர்திணையாகக் கூறுவது ஆட்படையணியாம்.

எ-டு : கதிரவன் மேலைக்கடலில் ஆழ்ந்தான்.

இறந்தோரையும் பிரிந்தோரையும், உயிரற்ற பொருள்களையும் கருத்துகளையும் விளிப்பது, விளியணி (Apostrophe) யாம்.

எ - டு : “சாவே! உன் கூர் எங்கே? கீழுலகே! உன் வெற்றி எங்கே?' எ-டு: புதிய ஏற்பாடு.