உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




108

18) பலபடப் புனைவணி

கட்டுரை வரைவியல்

ஓர் ஆளை அல்லது பொருளைப் பல நிலை கூறிப் பாராட்டுதல் பலபடப் புனைவணியாம்.

டு: சிறந்த மனைவி தன் கணவனுக்கு அறிவுரை கூறுவதில் அமைச்சியாயும், அன்பும் பொறையும் கற்பிப்பதில் ஆசிரியையாயும், உடல்நலம் பேணுவதில் அன்னையாயும், வீட்டுக் காரியத்தை நடத்துவதில் கருமத் தலைவியாயும், பணிவிடை செய்வதில் வேலைக்காரியாயும் இருப்பாள்.

19) மால்பணி அல்லது மேன்மேலுயர்ச்சி (Climax)

பொருள்களைப் படிப்படியாய் ஒன்றுக்கொன்று மேலாகக் கூறுவது மால்பணியாம். (மால்பு = ஏணி. climax = ladder)

எ - டு : இலக்கணமும் இலக்கியமும் சேர்ந்தது இயற்றமிழ்; அதனோடு பண்ணும் (இராகமும்) தாளமும் சேர்ந்தது இசைத்தமிழ். அதனோடு அபிநயமும் ஆட்டமும் சேர்ந்தது நாடகத் தமிழ்.

20) எதிர்மால்பணி அல்லது மேன்மேல் தாழ்ச்சி (Anticlimax or Bathos)

பொருள்களைப் படிப்படியாய் ஒன்றுக்கொன்று கீழாகக் கூறுவது எதிர் மால்பணியாம்.

-

டு : ஒரு நன்மையைப் பெரியோர் சொல்லாமற் செய்வர்; சிறியோர் சொல்லிச் செய்வர்; கீழ்மக்கள் சொல்லியுஞ் செய்யார்.

21) முன்னவணி (Innuendo or Insinuation)

ஒரு செய்தியை வெளிப்படையாய்க் கூறாது, குறிப்பாகக் கூறுவது முன்னவணியாம்.

எ-டு: ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர்க்குத் தமிழ்ப்புலமை தானாய் அமைந்துவிடுகிறது.

22) புணர்நிலையணி (The Condensed Sentence)

புணர்நிலையணியாவது வேறுபட்ட பல பொருள்களை அல்லது செய்திகளை ஒரு பயனிலைகொண்டு முடித்தல்.

கதிரவன் மறைந்தபோது அடியார் கைகளும், தாமரை மலருங் குவிந்தன.