உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அணியியல்

இவ் வணி இரட்டுறல் கலந்தும் வரும்.

109

டு : அன்பரை யிழந்தார் கண்ணும் அடியுண்ட தேன்கூடும் கண்ணீர் சிந்தும்.

கண்ணீர் = 1. கண் + நீர். 2. கள் + நீர்.

23) வளைகூற்றணி (Periphrasis or Circumlocution)

ஒரு பொருளை அல்லது செய்தியை நேரடியாய்க் கூறாமல் வட்டவழியில் சொற்பெருகக் கூறுவது வளை கூற்றணி.

எ-டு : கால்கழி கட்டில்

= பாடை.

கும்பகருணனுடைய வேலையைச் செய்துகொண்டிருக் கிறான் = தூங்குகிறான்.

=

அரைவண்டியில் கால்மாட்டைப் பூட்டிப் போகிறான் = நடந்து போகிறான்.

முதற்குறைக் கமலம் (மலம்), செத்த குரங்கு (சாமந்தி) இருபதினாயிரங் கொட்டைப் பாக்காய் (அம்மணமாய்) இருந்தாள், என்பன போன்றவை செய்யுட்கே யுரியன.

24) ஒலியணி (Onomatopoeia)

சொற்களின் ஒலியினால் பொருள் தோன்றக் கூறுவது ஒலியணியாம்.

எ - டு : உலகமெல்லாம் கிடுகிடு வென்று நடுங்கும்படி ஓர் இடி முழங்கிற்று.