உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




5

கட்டுரையியல் - ESSAY- WRITING

1. கடிதமெழுதுதல் (Letter Writing)

கடிதப் பகுதிகள் :

i. இருப்பிடமும் தேதியும்

இருக்கையும் தேதியும் பொதுமுறை. (சாதாரண)க் கடிதத்தில் வலப்புறம் மேலும், வேண்டுகோள் முறையீடுகளில் (விண்ணப்ப மனுக்களில்) இடப்புற அடியிலும் குறிக்கப்படல் வேண்டும்.

ii. முகவுரை

வேண்டுகோளிலும் (விண்ணப்பத்திலும்) முறையீட்டிலும் (மனுவிலும்) தலைப்பில் இன்னாரிடமிருந்து இன்னாருக்கு என்று, முகவரியுடன் (address) அல்லது அஃதின்றி எழுதுவது முகவுரை யாகும். இது பொதுமுறை (சாதாரண)க் கடிதத்திற்கு வேண்டுவ தன்று.

iii. விளி (Address or Salutation)

கடிதம் பெறுவாரைச் செய்தியறிவிக்குமுன் விளிப்பது விளியாகும்.

எ-டு: ஒருமை

நண்ப,

w

ஐய,

உயர்வுப்பன்மை நண்பரீர், ஐயரீர்,

பன்மை

நண்பர்காள்,

ஐயன்மீர்,

அன்பு குறித்தற்கு அருமை, அன்பார்ந்த என்னும் அடைகளையும், வணக்கங் குறித்தற்குக் கனம், கனம் பொருந்திய என்னும் அடைகளையும் விளிப்பெயர்க்கு முன் சேர்த்தல் வேண்டும்.