உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




122

-

கட்டுரை வரைவியல்

நொடியையும் பயன்படுத்தல் - குறிநூலையும் பிறப்புக் கணிப்பை யும் நம்பிக் காலத்தை இழவாமை வாழ்நாட்காலம் ஒரு பேறாயிருத்தல் - வாழ்நாளை நீட்டிக்கும் வழிகள் - காலத்தை வீண் போக்குவதின் தீமை - இறப்பின் உறுதியும் வாழ்நாள் எல்லை கடவாமையும் - முடிவு.

viii. நாட்டு வாழ்க்கை (Rural life)

இடம்பற்றிய வாழ்க்கை : (1) காட்டு வாழ்க்கை, (2) நாட்டு வாழ்க்கை, (3) நகர வாழ்க்கை - நாட்டு வாழ்க்கை வரையறை - அதன் வசதிகள் : (1) மக்கள் நெருக்கமின்மை, (2) நற்காற்று, (3) இயற்கைக் காட்சி, (4) ஒற்றுமை, (5) ஒட்டோலக்கம் (ஆடம்பரம்) இன்மை, (6) செலவுக் குறைவு, (7) சால்வும் (திருப்தியும்) அமைதியும், (8) வேளாண்மை நிகழ்ச்சி, (9) பண்டையொழுக்க வழக்கம் - எல்லாரும் நாட்டு வாழ்க்கையை மேற்கொள்ள முடியாமை - அதன் குறைகள் : சில பொருள் கிடையாமை, பாதுகாப்புக் குறைவு, மக்கட் பேதைமை, நலவழிக்கேடு, கற்றார்க்கு வேலையின்மை, அஞ்சல்தாழ்ப்பு, செயற்கைக் காட்சியும் கற்றோருறவு மின்மை - ஓய்ந்த வர்க்கு நாட்டு வாழ்க்கை - கெடும்போது சீர்திருத்தல் - முடிவு.

ix. விளையாட்டின் முதன்மை (The importance of games and sports)

-

விளையாட்டின் வரையறவு - உடலுழைப்பும் மனவுழைப்பும் உடலுழைப்பின் முக்கியம் மாணாக்கர்க்கு டற்பயிற்சியின் இன்றியமையாமை - விளையாட்டின் வகைகள் - விளையாட்டின் பயன்கள் : உடல்நலம்,வலிமை, விடாமுயற்சி, ஒற்றுமை, இன்பம், புகழ், பிழைப்பு - முடிவு.

x. செல்வத்தைச் சரியாய்ச் செலவிடல் (The right use of wealth)

செல்வத்தின் வரையறை - அதன் இன்றியமையாமை - அதைத் தேடல் - அதைப் பகிர்தல்: தெய்வம், அரசன், விருந்து, இனம், இரப்போன், தான் - வருவாயுள் அரைப் பகுதியைத் தனக்கும் காற்பகுதியைப் பிறர்க்கும் செலவிட்டு, மீதிக் காற்பகுதியை மீத்துவைத்தல் - வருவாய்க்கு மிஞ்சியும் வீணாகவும் செலவு செய்யாமை தன் அளவுக்கு மிஞ்சியும் தன் குடும்பத்தைக் கவனியாதும் அறஞ்செய்யாமை - வருவாய் வரத்தக்க வழியில் மீதத்தை இட்டு வைத்தல் பேரவாக் கொண்டு முதலையிழவாமை அளவுக்கு மிஞ்சிச் சிக்கனமாயிராமை. இன்றியமையாதவற்றிற்கு வேண்டிய அளவு செலவிடல் - பிறங்கடை (வாரிசு) இல்லாவிடின் பொதுநலத் தொண்டிற்கு உடைமையை யெழுதி வைத்தல் - முடிவு.

-