உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கட்டுரையியல்

123

xi. ஒரு வேலையைத் தெரிந்துகொள்ளல் (The choice of a profession) வேலையின் வரையறை அதன் இன்றியமையாமை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அல்லது சிற்சில வேலைக்கே திறமையமைந்திருத்தல் - இளமையில் வேலைப் பயிற்சி - பெற்றோர்தம் மக்களின் விருப்பு, திறமை இயல்பு என்னும் இவற்றுக் கேற்றவாறு அவரைப் பயிற்றுவித்தல் - பல்வேறு வேலைக்குப் பயின்றிருப்பதின் நன்மை - வேலை தெரிந்துகொள்ளாமற் கல்வி பயில்வதின் கேடு விருப்பத்திற்கும்திறமைக்கும் ஏற்காத கல்விப் பயிற்சியின் கேடு பொதுக் கல்வியும் தெரிந்துகொண்டே வேலைக்குச் சிறப்புப் பயிற்சி - முடிவு.

xii. பள்ளிக்கூடப் புறப்போக்கின் முதன்மை (The importance of school excursions)

-

-

புறப்போக்கின் வரையறை - போகத்தக்க இடங்கள் - போக்கின் வசதிகள்; செலவுக் குறைவு பாதுகாப்பு, அரிய இடங் காணல், உணவு உறையுள் வசதி போக்கின் நன்மைகள்; கூட்டுறவு, ஒற்றுமை, உடல்நலம், காட்சியின்பம், அறிவு, சிறந்தவரையும் சிறந்தவற்றையும் காண்டல் - போக்கின் முக்கியம்; சரித்திரம், திணை, நூல், அறிவியற்கலை முதலியவற்றிற் கற்ற பொருள்களைக் கண்கூடாகக் கண்டு தெளிதல் -

முடிவு.

xiii. திரைப்படக் காட்சியின் பயன் (The effects of attending cinema shows)

திரைப்படக் காட்சியின் வரையறை - அதன் வகைகள் - அதன் நன்மைகள் : அறிவு வளர்ச்சி, இன்பம், கூட்டுறவு, பிழைப்பு - அதன் தீமைகள்: தூக்கம், பார்வை, ஒழுக்கம், பொருள், உடல்நலம் என்னும் இவற்றின் கேடு முடிவு.

xiv. போரின் தீமைகள் (The evils of war)

போரின் வரையறை - அதன் தீமைகள் : உயிர், உறுப்பு, பொருள் முதலியவற்றின் இழப்பு தொழிற்கேடு - சில குடும்பங்கள்துணையின்றி வருந்தல் -ஒரு நாடு கடன்படல் அல்லது அடிமைப் படல் - பொருள் விலை மிகை - புது வரி - அமைதிக் குலைவு - பெருவாரி நோய் - முடிவு.

குறிப்பு : போரால் நன்மைகளுமுண்டு. அவை தற்காப்பு, கரந்தை (இழந்ததை மீட்டல்), நயன் (நீதி) வழங்கல், பொருட்பேறு, மறச்சிறப்பு, வேலையளிப்பு, ஒற்றுமை முதலியன.