உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




124

கட்டுரை வரைவியல்

XV. இந்தியாவிற்கு ஒரு பொதுமொழி தேவையா? (Is a common

language necessary for India?)

இந்தியாவின் பரப்பு இந்தியாவிற்கு ஒரு பொதுமொழி இருப்பதன் வசதி - இன்று ஆங்கிலம் பொதுமொழியா யிருத்தல் தந்நாட்டு (சுதேச)ப் பொதுமொழிக்குத் தடை : (1) நாடு, நாகரிகம், மதம், குமுகம் (சமூகம்), மொழி முதலியவற்றின் பன்மை, (2) ஒரு மொழி பொதுவாயின் அது பிறமொழியாரை வருத்தல், (3) இந்திய மைய ஆட்சி பன்மொழியில் நடைபெற இயலல் - இற்றை நிலையில் ஒரு புதுப் பொதுமொழி வேண்டாமை - முடிவு.

xvi. உயர்நிலைப் பள்ளி மாணவர் குமுகாயத் தொண்டு செய்யக் கூடிய பற்பல வழிகள் (Different ways in which High School

pupils can do social service)

முகவுரை - தொண்டு செய்யும் வழிகள் : (1) ஏழை மாணவர்க்கு இலவசக் கல்வி பயிற்றல், (2) பொதுநல வினைக்குப் பொருள் சேர்த்தல், (3) துன்ப நிகழ்ச்சிகளில் உதவல், (4) கூட்டங்களில் அமைதி காத்தல், (5) ஒருவர் பிறரை ஏமாற்றுவதைத் தடுத்தல், (6)அன்முறை (அநியாயங்)களை அரசியலார்க்கு அறிவித்தல், (7)அரசியல் அதிகாரிகளுடன் ஒத்துழைத்தல் முடிவு.

xvii. அன்றாட வாழ்க்கையிற் கலைமுறை யறிவின் பயன்

(Importance of scientific knowledge in every-day life)

முகவுரை - கலைமுறையறிவின் பயன் : (1) உடல்நலம் பேணல், (2) முதன் மருத்துவம் (First Aid), (3) ஒரு வினையை வெல்வழியாய்ச் (உபாயம்)

செய்தல்,

(4)

செலவைச்

சுருக்கல்,

(5) தொழில் செய்தல், (6) பொறிகளைச் (machines) செப்பனிடல், (7) துன்பத்தில் தப்புதல், (8) பிறருக் கறிவு புகட்டல் - முடிவு.

(2)

-

தலைவர்க்குக்

·

xviii. வாழ்க்கையிற் கட்டொழுங்கின் பயன் (Value of discipline in life) கட்டொழுங்கின் வரையறை - அதற்குரிய குணங்கள் : பொறுமை, அடக்கம், பணிவு முதலியன அது வெளிப்படும் வழிகள் : (1) காலந்தவறாமை, கீழ்ப்படிதல், (3) ஒன்றை அளவாய் நுகர்தல், (4) வரவுக்கு மிஞ்சிச் செலவு செய்யாமை, (5) செய்வன திருந்தச் செய்தல், (6) பிறர் நலம் பேணல், (7) துன்பம் பொறுத்தல் - அதன் பயன்: நிலை யுயர்தல், நீடு வாழ்தல், மதிப்பு, மறுமையில் நற்கதி - முடிவு.