உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2

2. சில இனவெழுத்துகளின் பெயர்கள்

எழுத்து

i.

ii.

iii.

ல்

இவ் வ்

பெயர்

டண்ணகரம், முச்சுழி ணகரம். தந்நகரம். மொழிமுதல் நகரம். றன்னகரம், இருசுழி னகரம்.

இடையின ரகரம், சின்ன ரகரம். வல்லின றகரம், பெரிய றகரம்.

சின்னலகரம்.

கட்டுரை வரைவியல்

சிறப்பு ழகரம், பெரிய ழகரம், மகர ழகரம். பொது ளகரம்.

வினவெழுத்துகளை விதந்து கூறற்கு

வெவ்வேறு

அடைமொழிகள் (Epithets) இருப்பினும், இவற்றின் ஒலிகள் மட்டும் எவ்விதத்தும் மாறாவென்பதை மாணவர் திண்ணமா யறியக்கடவர். பெரிய றகரம், பெரிய ளகரம் என்று கூறுவது வழுவாகும்.

ணகரம், ரகரம், ழகரம் என்று கூறுவதில் ‘கரம்' என்பது சாரியை. (இங்குச் சாரியையாவது ஒரு பொருளுமில்லாது எழுத்துகளை எளிதாயொலித்தற்குச் சேர்க்கப்படும் அசை அல்லது ஒலி) இவற்றை ண, ர, ழ என்று கரச் சாரியையின்றியுங் கூறலாம்.

ணகரம் என்பது 'ண்' என்னும் மெய்யெழுத்தையாவது, 'ண என்னும் உயிர்மெய்யெழுத்தையாவது 'ண' முதல் ‘ணௌ' வரையுள்ள பன்னீ ருயிர்மெய்யெழுத்துகளில் ஏதேனு மொன்றை யாவது, அவை யெல்லாவற்றையும் தொகுதியாகவாவது இடத்திற் கேற்ப உணர்த்தும். ஆனால் ‘ணகரமெய்' என்பது 'ண்' என்னும் மெய்யைமட்டும் குறிக்கும். இங்ஙனமே பிறவும்.

குறிப்பு :ஆசிரியர் மாணவரை எல்லா எழுத்துகளையுஞ் செவ்வை யாய்ப் பலுக்க (உச்சரிக்கப்) பயிற்றல் வேண்டும். மாணவர் குறில் நெடில்களை

மாத்திரை வேறுபாடில்லாமலும், இன வெழுத்துக்களை ஒலி வேறுபாடில்லாமலும் பலுக்குவது வழக்கம். அவர் தாம் தவறாய்ப் பலுக்குவது போன்று எழுதுவதனாலேயே பெரும்பாலும் எழுத்துப் பிழைகள் நேர்கின்றன. ஆகையால் கீழ்வகுப்பிலிருந்தே ஆசிரியர் அதைத் திருத்தல் வேண்டும்.

சில ஆங்கிலவழித் தமிழறிஞர், ஆங்கிலத்திலுள்ள 't' போல ஒன்றுபட்டொலிக்கும் றகர விரட்டையைப் பிளவுபடத் திரித்துப் பலுக்குவர். அது தவறு.