உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எழுத்தியல்

எ-டு: சொல்

பிழை

3

திருத்தம்

vetti

வெற்றி

vetri

றகரம் னகரமெய்க்குப் பின்வரும்போது candle என்னும் ஆங்கிலச் சொல்லிலுள்ள'd' ஒத்தொலிக்கும்.

எ - டு : கன்று - kandu

3. ரகர றகர வேறுபாடுகள்

i. ரகரம் வருமிடங்கள்

1) வடசொற்களும் திசைச்சொற்களும்

வடசொற்களிலும் திசைச்சொற்களிலும் வருவது இடையின ரகரம்.

றகரம் தமிழுக்கே சிறப்பெழுத்தாதலின், பிறமொழிச் சொற்களில் வருபவை பெரும்பாலும் இடையின ரகரமே. கிறிஸ்து, சீறாப்புராணம், உமறுப் புலவர் என்னும் சில திசைச்சொற்களில் மட்டும் வல்லின றகரம் வைத்தெழுதப்படும். பிற திசைச்சொற்களி லெல்லாம் அது வழுவாகும்.

எ-டு: பிழை

திருத்தம்

றாமசாமி (வ.)

இராமசாமி

பிறாமணன் (வ.)

பிராமணன்

அபறாதம் (வ.)

அபராதம்

உறுமால் (இ.)

உருமால்

குருமா

குறுமா (இ)

தமிழிலில்லாத வடவெழுத்துக ளிருப்பதனாலும், தமிழில் மொழிமுத லிடை கடைகளில் வராத எழுத்துகள் மொழி முத லிடை கடைகளில் வருவதனாலும், வடசொற்களை ஒருவாறு அறியலாம். தமிழறிவில்லாத மாணவர் தமிழாசிரியர்வாய்க் கேட்டே வட சொற்களை யறிதல் கூடும்.

2) மெய்யீறு

மொழிக்கு இறுதியில் மெய்யெழுத்தாய் வரக்கூடியது இடையின ரகரமேயன்றி வல்லின றகர மன்று.

எ - டு : அவர், ஊர், குதிர், இடக்கர்.

வல்லின றகரமெய் புணர்ச்சியாலன்றி இயல்பாக ஒரு

சொல்லிறுதியில் வராது.