உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

கட்டுரை வரைவியல்

எ - டு : ஆள் + சி - ஆட்சி. முள் + தாழை - முட்டாழை

பிழை சூட்சி

திருத்தம் சூழ்ச்சி (சூழ் + சி)

7. மொழியிறுதி யெழுத்துகள் (Final Letters)

சட்சட், கப்கப் போன்ற இரட்டைக் கிளவிகளிலும் குறிப்புச் சொற்களிலுமன்றி, வல்லின மெய்களும் ஙகர மெய்யும் மொழி யிறுதியில் வரவே வரா. இவற்றையும் சட்டுச் சட்டு, கப்புக்கப்பு என்றெழுதுவதே நல்லது.

வெரிந், பொருந் என்ற இரு சொற்களில் மட்டும் 'ந்’ஈற்றெழுத்தாக வரும். பிறசொற்களிலெல்லாம் 'ன்' தான் ஈற்றெழுத்தாக வரக்கூடும். வெரிந் = முதுகு. பொருந் = பொருந்துதல்.

அயன்மொழிச் சொற்கள் வல்லின மெய்யில் முடியின் அதன் மேல் உகரம் சேர்த்துத் தமிழில் எழுதப்படும்.

எ - டு : சத் (வ.) - சத்து, விராட் (வ.) - விராட்டு.

குறிப்பு :பிறமொழிகளிலுள்ள சிறப்புப் பெயர் (Proper names) களும், கலைக்குறியீடுகளும் (Technical Terms) எழுத்துப் பெயர்ப்பில் (Transliteration) மொழி முதலிடைகடை பற்றிய தமிழ் விதிகட்கு மாறாக மூலமொழி யொலியொட்டி யெழுதப்படுவது தவறு. பிறமொழிகளை நோக்குக.

எ-டு : பிழை

லிங்கன்

ரஞ்சிட்சிங்

திருத்தம்

இலிங்கன்

இரஞ்சிட்சிங்கு

8. வடவெழுத்து (Sanskrit Letters)

வடசொற்கள் தமிழில் வந்து வழங்கும்போது, சில எழுத்துகள் பின்வருமாறு திரியும்.

எண் எழுத்து

திரிபு

எடுத்துக்காட்டு

இடம்

1

ஜாதிசாதி

முதல்

ப்ரயோஜனம் - பிரயோசனம் இடை

""

சரோஜா - சரோசா

கடை

""

பங்கஜம் - பங்கயம்

இடை

யோ

சோ

ஜ்

(கெடுதல்)

ஜ்யோதி-சோதி

ஜ்ஞானம்-ஞானம்

முதல்