உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எழுத்தியல்

பிழை

யிருக்கிறான்

யெடத்தெரு

திருத்தம்

இருக்கிறான்

இடைத்தெரு

19

நிலைமொழி ஈற்றிலுள்ள இ, ஈ, ஐ ஒழிந்த மற்ற ஒன்பதுயிர்களுடன் உகரம் புணர்ந்து, 'வு' வருமொழி முதலில் வரலாம்; ஆனால், தனித்து மொழிமுதலில் வராது.

எ டு: பல உள பலவுள்

பிழை

வுள, வுண்டு

திருத்தம்

உள, உண்டு

6. மொழியிடை யெழுத்துகள் (Medial Letters)

மொழியிடையில் ட், ற் என்ற மெய்களுக்குப் பின் வேறொரு மெய்

வரவே வராது.

பிழை வெட்க்கம் முயற்ச்சி

திருத்தம்

வெட்கம்

முயற்சி

க், ச், க், ப் என்ற மெய்களுக்குப்பின் தன் உயிர்மெய்தான் வரும்; வேற்றுயிர்மெய் வராது.

எ - டு : பக்கம், அச்சம், கத்து, அப்பு

பிழை

சக்தி

திருத்தம்

சத்தி

பத்தி

பக்தி

திசைச்சொல்லாயின், ரகரமெய் இரட்டும். எ டு : குர்ரம்

(தெலுங்கு)

ய், ர், ழ் என்ற மெய்கட்குப்பின் தன் மெய் வரா; வேற்று மெய்யெழுத்துகள் வரலாம்.

எ - டு : வேய்ங்குழல், ஆர்ங்கோடு, பாழ்ங்கிணறு.

வாய்க்கால், தேர்த்தட்டு, தாழ்ப்பாள்.

ளகரமெய் வல்லினத்தோடு புணரின் டகரமாகத் திரியும். ழகர மெய் சில மரூஉச் சொற்களிலன்றித் திரிவதின்று.