உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

viii. திட்டம் (Precision)

கட்டுரை வரைவியல்

ஒரு பொருளை ஐயமும் குத்துமதிப்பும் (approximation) பொதுநிலையு மின்றி இயன்றவரை வரையறுத்துச் சொல்வது திட்டமாகும்.

எ - டு : பவணந்தி பல நூற்றாண்டுகட்கு முற்பட்டவர் என்னாது 12ஆம் நூற்றாண்டின ரென்க. கோயில்வெண்ணி தஞ்சைக் கோட்டத்தில் நீடாமங்கலத்திற் கருகிலுள்ள ஒரு புகை வண்டி நிலையம். செயிற்றியம் என்பது அழிந்துபோன ஒரு நாடக இலக்கணநூல். ஒரு டாலர் = 32 ரூபா 13.2 அணா. போது என்பது பேரரும்பு என்றிங்ஙனங் கூறுக. இங்ஙனமே பிறவும்.

ix. பொருத்தம் அல்லது தகுதி (Propriety)

ஒரு சொல்லை அதற்குரிய பொருளிலும், ஒரு பொருளுக்கு அதற்குத் தகுந்த சொல்லையும் வழங்குவது பொருத்தமாகும்.

எ - டு : உண்டி வினை கூறுமிடத்து, சோறு உண்டான், சாப்பிட்டான்; தண்ணீர் குடித்தான்; பலகாரம் தின்றான் என்று கூறல் வேண்டும். தண்ணீர் சாப்பிட்டான், காப்பி சாப்பிட்டான் என்பன தவறு.

ஒருவனிடம் ஒரு பொருளைக் கேட்கும்போது, கொடு என்பது உயர்ந்தோன் சொல்; தா என்பது ஒத்தோன் சொல்; ஈ என்பது இழிந்தோன் சொல்.

தவிர்ப்பு (exception) என்னும் பொருளில், புறனடை என்னுஞ் சொல்லையும், உள்ளடக்கம் என்னும் பொருளில் ஒருவகை உவமைப் பெயராகிய உள்ளுறை என்னுஞ் சொல்லையும், வழங்குவது சரியன்று.

x. இனிமை (Euphony)

இழிசொல்லும் வழூஉச்சொல்லும் நீக்கிப் பெரும்பாலுந் தென் சொற்களால், ஓசையின்பம்பட இயல்பான மோனை யெதுகை யமைத்தெழுதுவது இனிமையாகும்.

எ-டு

எ - டு : 'இற்றைக்கு ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழ்ப்புலவர் அனைவருந் தமது தமிழ்மொழி திரிபடைந்து மாறுதற்கும் அயன்மொழிச் சொற்கள் அதன்கட் புகுந்து விரவுதற்கும் இடங்கொடாமல், இலக்கண இலக்கிய வரம்புகோலித், தாமும் தனித் தமிழிலேயே நூல்கள் இயற்றி, அதனை ஒருமுகமாய் நின்று கண்ணுங் கருத்துமாய்ப் பாதுகாத்து வந்தனர்."

-

முற்கால பிற்காலத் தமிழ்ப்புலவோர், ப. 24 (ஆசிரியர் மறைமலையடிகள்).