உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்றொடரியல்

69

எ - டு : பனுவல் (பிரபந்தம்), ஓலக்கம் (தர்பார்), நெறிமுறை (principle).

vii. பொருள் வலிமை (Energy or Force)

ஒரு செய்தியைப் பிறர் நம்புமாறு, தக்க ஏதுவும் மேற்கோளும் உவமையும் எடுத்துக்காட்டித் தகுந்த சொற்களால் வற்புறுத்திக் கூறுவது பொருள் வலிமையாகும்.

எ-டு: பாடு என்றொரு தொழிற்பெயர் ஈறு இல்லையென்று யான்

தொழிற்பெயராயிருத்தலின்

பலமுறை கூறியிருப்பவும், சிலர் அஃதுண்டென்று வலிக் கின்றனர். கோட்பாடு என்பதில் கோள் என்பது முதனிலை திரிந்த அது முதனிலை யாகாமையும், புறப்படு வெளிப்படு என்பன போலக் கோட்படு என்பதே முதனிலையாதலுங் காண்க. கூப்பாடு என்ப கூப்பிடு என்பதே முதனிலையாகும்; அஃதன்றிக் கூ (கூவு) என்பது முதனிலையெனின், சாப்பாடு என்பதில் சா என்பது முதனிலையாதல் வேண்டும். அஃதாகாமையின், சாப்பிடு என்பதன் தொழிற்பெயரான சாப்பீடு என்பது சாப்பாடு என்று திரிந்தாற்போல, கூப்பிடு என்பதன் தொழிற்பெயரான கூப்பீடு என்பதும் திரிந்ததாகவே கொள்ளல் வேண்டும்.

இலக்கணவுரை வழுக்கள்

பொருள் வலியுறுத்தும் முறைகள்

"ஒருவன் உலக முழுவதும் கைப்பற்றினாலும், தன் ஆயுளை யிழந்துவிடின் அவனுக்கு ஊதிய மென்ன?”

வினா (Interrogation or Rhetorical Question) அவன் அரைகுறையாய்ப் படித்தவனல்லன் - எதிர்மறை (Meiosis or Litotes)

“அறத்தினும் ஆக்கமில்லை; அதை மறத்தலினுங் கேடில்லை-” உடன்பாடும் எதிர்மறையும். நாள் தவறினும் நாத் தவறான் - எதிர்மறையும்மை. கண்டேன் தமிழ்ச்சுவையை - முறைமாற்று. செய்யவே செய்வான் தேற்றேகாரம்.

-

தகுந்த சொற்கள், மீமிசைச்சொல், இரட்டைச் சொல் (எ - டு : புத்தப்புதிய), இணைமொழி, தொடர்மொழி, உவமை, பழமொழி, மேற்கோள் முதலியனவும் பொருளை வலியுறுத்துவனவாகும்.