உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




68

கட்டுரை வரைவியல்

முதல்

எ - டு : ஒரு நல்ல தென்னாட்டுத் தமிழ்ப் பையன். -

செந்தமிழாக்கம் கண்ணுங் கருத்துமாய்ப் பேணும் ஒரு நல்லிசைப் புலவர். -

தன் காலத்தை வீணாய்க் கழிக்கும் ஓர் இளைஞன் -

கடை

இடை

நல்ல ஒரு பையன் என்பது தவறு. ஒரு நல்ல பையன் என்பதே சரி. தழுவப்படுவது அஃறிணைப் பெயராயின் நல்ல என்பது நல்லது என முன்னிற்கலாம்.

எ டு : நல்லதொரு காலம்.

vi. தெளிவு (Perspicuity)

திசைச்சொற்கள், அயற்சொற்கள்(Foreign words) அருஞ்சொற் கள், பல்பொருட் சொற்கள், கவர்படுபொருண்மொழி, பொருண் மயக்கம், குன்றக்கூறல் முதலியனவில்லாமல், வாசிக்கக் கற்றோர்க் கெல்லாம் பொருள் விளங்குமாறு எளிய சொற்களால் சொற்றொட ருறுப்புகள் நிரம்ப எழுதுவது தெளிவாகும்.

எ - டு : "மீன்கள் இடுகின்ற முட்டையெல்லாம் பொரிந்து சிறுமீன் களாகி வளருமாயின், நீண்டகன்ற பெருங்கடலும் அவற்றிற் கிடமளிக்கப் போதியதாகாது...... இரண்டு மீன்களிலிருந்து பன்னூறாயிரம் மீன்கள் தோன்றும்..... இவற்றைத் தோற்றுவித்த பெரிய மீன்களே அதிவிரைவில் இவற்றைப் பிடித்துத் தின்றுவிடுகின்றன”. (பா.வே.மாணிக்க நாயகர்) - திரு. க.ப.மகிழ்நன் அவர்கள் மொழிபெயர்ப்பு.

மா வீழ்ந்தது என்று மயங்கக் கூறாது, மாமரம் வீழ்ந்தது, பரிமா வீழ்ந்தது என்று தெளியக் கூறுக.

செம்பொன் பதின்பலம் என்பதைப் பொருட்கேற்ப, செம்பு ஒன்பதின்பலம் எனப் புணர்க்காதும், செம்பொன் பதின்பலம் எனப் பிரித்தும் எழுதுக.

புலி கொன்ற யானை என்பதை, புலியாற் கொல்லப்பட்ட யானை, புலியைக் கொன்ற யானை என்று விரித்தெழுதுக.

கௌடோ செலவிற் குக் கல்வி கற்றார் என்பதை, குக் கௌடோ செலவிற் கல்வி கற்றார் என்று மாற்றியெழுதுக.

வழக்கற்ற சொல் தமிழ்ச்சொல்லாயும் அதன் பொருளில் வேறு தமிழ்ச்சொல் இல்லாமலும் இருந்தால், அச் சொல்லை வழங்கத்தான் வேண்டும். ஆனால், வலப்பக்கத்தில் பிறைக்கோட்டில் அதன் பொருளைக் கொண்ட பிறமொழிச் சொல்லை அமைத்தல் வேண்டும்.