உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்றொடரியல்

iv. முன்மைநிலை (Priority)

67

தழுவுகின்ற சொற்களும் சொற்றொடர்களும், தழுவப்படு கின்ற சொற்கட்கும் சொற்றொடர்கட்கும் முந்த வேண்டும்.

எ-டு: 'சிலர் கூறுவர் தம் தாய் தந்தையர் பெயர் ஆதி பகவன் என்பதைத், திருவள்ளுவர் தம் முதற் குறளாற் குறிப்பித்ததாக’ என்பது,

'திருவள்ளுவர்

தம்

தாய்

தந்தையர் பெயர் ஆதிபகவன் என்பதைத் தம் முதற் குறளாற் குறிப்பித்ததாகச் சிலர் கூறுவர்' என்றிருத்தல் வேண்டும்.

தழுவுஞ் சொல்லுக்கும் தழுவப்படும் சொல்லுக்கும் இடை யில், பொருள் மயக்கத்திற் கிடமில்லாத சொல்லேனும் சொற்றொட ரேனும் வரலாம். அது இடைப்பிறவரல் எனப்படும்.

அறிவும் தொழிலும்பற்றிய சிறப்புப் பெயர், இயற்பெயர்க்கு (Proper Name) முன்னும் பின்னும் வரலாம். முன்வரின் இயல்பாம்; பின்வரின் இயற்பெயர் சிலவிடத்துத் திரியும்.

எ - டு : புலவன் வள்ளுவன் = வள்ளுவப் புலவன்.

ஆசிரியர் பிரகாசம் சாமுவேல் = பிரகாசம் சாமுவேலாசிரியர்.

ஈடும் எடுப்பும், சீரும் சிறப்பும் முதலிய இணைமொழிகள் நிலைமொழியும் வருமொழியும் முன்பின் முறை மரபுப்படியே வழங்கவேண்டும்.

V. அண்மைநிலை (Proximity)

மாறாமல்,

தழுவுகின்ற சொற்களும், சொற்றொடர்களும், தழுவப் படுகின்ற சொற்கட்கும், சொற்றொடர்கட்கும் முந்துவதுடன் இயன்றவரை அணித்தாயு மிருத்தல் வேண்டும்.

‘நீ வந்த காரணத்தை என்னிடம் சொல்' என்பதை, 'நீ என்னிடம் வந்த காரணத்தைச் சொல்' என்று மாற்றினால், பொருள் மாறுதல் காண்க.

எண்ணுப் பெயர்கள், தாம் பிற சொற்களோடு கூடிப் பெயரைத் தழுவும்போது, பிற சொற்கள் பிளவுபடாது ஒரு தொடரா யிசைப்பின் அவற்றுக்கு முன்னும், அவை பிளவுபட்டு இருதொடரா யிசைப்பின் அவற்றுக்கிடையும் ஒரு தொடரேனும் நெடுந்தொடராய்ப் பெயரெச்சத்தில் முடியின் அதற்குப் பின்னும் நிற்கும்.