உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

கட்டுரை வரைவியல்

யும் துணையின்றி விட்டு மாண்டனனாக, அம் மகளிர்க் கேற்ற கணவரைத் தேடிக் கொடுப்பது தமது கடம்ை என்று அங்குமிங்கும் அலைந்து தேடினர். இது நிறைவேறாது போகவே, புலனழுக்கற்ற அப் புலவர், வடக்கிருந்து இவ்வாழ்வை நீத்தனர். வடக்கிருத்தல் என்னும் இச் செய்தி, ஒருவரது நாணுடைமை புரைபட்டபொழுது உணவு நீக்கி உயிர் துறக்கும் ஓர் ஒழுக்கமாகும்.”

(பா.வே.மாணிக்க நாயகர்) - திரு.க.ப.மகிழ்நன் அவர்கள் மொழிபெயர்ப்பு.

xiii. இசைவு (Concord or Agreement)

தழுவுஞ் சொல்லும் தழுவப்படும் சொல்லும் தம்முள் இலக்கண முரண்படாது இசைந்திருத்தல் இசைவாகும்.

6ஆம் வேற்றுமை யுருபுகள் பின்வருமாறு எண் குறிக்கும்.

எனது புத்தகம் -ஒருமை

என் புத்தகங்கள் - பன்மை

என் புத்தகம் அல்லது புத்தகங்கள்

என்னுடைய புத்தகம் அல்லது புத்தகங்கள் - பொது

தன்மை முன்னிலைப் பன்மைப் பெயர்களும், தாம் தாங்கள் என்னும் படர்க்கைப் பெயர்களும், எல்லாரும் என்னும் பெயரோடு கூடி நிற்கும்போது, முதல் வேற்றுமையாயின் இயல்பாயிருக்கும்; 8ஆம் வேற்றுமை யொழிந்த பிற வேற்றுமையாயின் குறுகி வேற்றுமைத் திரிபடையும்.

எ - டு : நாம் எல்லாரும் - நம்மெல்லாரையும்

நீங்கள் எல்லாரும் - உங்கள் எல்லாரையும்

எழுவாயும் பயனிலையும், அல்லது முன்னியற் பெயரும் (Antecedent) சுட்டுப் பெயரும், அல்லது முன்னியற் பெயரும் தற்சுட்டுப் பெயரும் (Reflexive Pronoun), அல்லது இயற்பெயரும் சிறப்புப் பெயரும், திணைபால்எண்இடங்களில் ஒத்திருக்க வேண்டும்.

எ-டு: யான் காணேன்

யாம் காணோம்

வேலன் வந்தான் வள்ளி வந்தாள் இடைக்காடர் வந்தார் (உயர்வுப்பன்மை) மக்கள் வந்தார்கள்

எழுவாயும்

பயனிலையும்