உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்றொடரியல்

மகன் - அவன் - தன்

மகள் - அவள் - தன்

ஒருவர்-அவர்தம்

மக்கள் - அவர்கள் - தங்கள்

முன்னியற் பெயரும் சுட்டுப் பெயரும் தற்சுட்டுப் பெயரும்

73

ஆசிரியன், பாரத்துவாசி, நச்சினார்க்கினியன் - சிறப்புப் பெயரும் இயற்பெயரும்.

உயர்திணையில், ஆண்பால் பெண்பால் என்னும் இருபாற் பெயரும் உயர்வுப் பன்மை ஈறேற்கும்.

எ - டு : அரசர் வந்தார், அரசியார் வந்தார்.

ஆர் விகுதி பெரும்பாலும் உயர்வுப் பன்மையாக ஒருமைக்கு வழங்கி வருதலின், அது பன்மை குறிக்கத் தவறும்போது ஈறுமேலீறு என்னும் இரட்டைப் பன்மை வேண்டப்படும்.

,

எ - டு : அவையார் வந்தார்கள்.

அன் சாரியை பெற்ற அர் ஈறாயின் இரட்டைப் பன்மை வேண்டியதின்று.

எ - டு : அவையார் வந்தனர்.

கடவுளை

ஆண்பாலிலும்

ஒன்றன்பாலிலும் கூறலாம்.

உயர்வுப்

எ - டு : கடவுள் இருக்கிறான், இருக்கிறார், இருக்கிறது.

பன்மையிலும்

குழந்தை என்னும் பெயரை ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால் என்னும் முப்பாலிலும் கூறலாம்.

எ - டு : குழந்தை வருகிறான் (ஆண்), வருகிறாள் (பெண்), வருகிறது (இருபாற்பொது). மகவு, சேய், குழவி, பிள்ளை என்ற பிற இளமைப் பெயர்களும் இங்ஙனமே.

ஆள் என்னும் பெயர், ஒருமையில், பாலறியப்படாவிடத்து உயர்வுப் பன்மைவினை கொண்டும், பாலறியப்பட்டவிடத்து ஆண்பால் அல்லது பெண்பால் அல்லது உயர்வுப் பன்மை வினைகொண்டும் முடியும்.

அம்மா வருகிறது என்பது தவறு. அம்மா வருகிறாள் என்று பெண்பாலிலாவது, அம்மா வருகிறார், அல்லது வருகிறார்கள் என்று உயர்வுப் பன்மையிலாவது கூறல் வேண்டும்.

எ-டு : ஓர் ஆள் வருகிறார்

பாலறியா இடம்.

ஓர் ஆள் வருகிறான் - (ஆண்பால்) - பாலறிந்த இடம். ஓர் ஆள் வருகிறாள் - (பெண்பால்)