உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

கட்டுரை வரைவியல்

அது என்னும் ஒன்றன்பால் ஈறும், அ, வை என்னும் பலவின்பால் ஈறுகளும் பெறாத அஃறிணைப் பெயர்களெல்லாம் ஒருமை பன்மை என்னும் இருமைக்கும் பொதுவாகும். அவற்றை ஒருமையாகவும் பன்மையாகவும் ஆள(பிரயோகிக்க)லாம். அவற்றின் எண்ணை அவற்றின் பயனிலைகளே காட்டும். இத்தகைய பெயர்கள் பால் பகா அஃறிணைப் பெயர்கள் எனப்படும்.

எ-டு : மரம் (ஒருமை) வளர்கின்றது. மரம் (பன்மை) வளர்கின்றன.

அறிவின்மை, மூப்பு, உறுப்பறை (அங்கவீனம்) முதலிய காரணம்பற்றி, மக்கள் இழிவாய்ப் பண்புப் பெயராற் கூறப்படும் போது, அப் பெயர்கள் பால்பகா அஃறிணைப் பெயர்போற் பாவிக்கப்படும்.

எ - டு : கிழம் போகிறது, போகின்றன. எ-டு:

சிலவிடத்து, உயர்திணைப் பெயர்கள், வடிவில் ஒருமையா யிருப்பினும் பொருளிற் பன்மையாகும். அவை சாதியேகவசன மென்று வடமொழியிலும், வகுப்பொருமை யென்று தென்மொழி யிலுங் கூறப்படும்.

எ - டு : பெற்ற தாயைப் பேணாத மூடர். டு:

பால்கள்

பெயர்களின் இகர ஈறு, பெண்பால் ஈறாயிராது எழுவாய் ஈறாயிருப்பின், சிலவிடத்து உயர்திணை ஒருமைப் ரண்டிற்கும், சிலவிடத்து இருதிணை ஒருமைப் பால்கள் மூன்றிற்கும் பொதுவாம்.

எ - டு : விறகுவெட்டி வந்தான், வந்தாள் - உயர்திணை.

கண்ணிலி வந்தான், வந்தாள், வந்தது - இருதிணை.

பேதை என்னும் பெயர், ஆண் பெண் என்னும் இருபாற்கும் பொதுவாம்.

எ - டு : இவன், இவள் ஒரு பேதை (அறிவிலி).

வேறு, இல்லை என்னும் குறிப்பு வினைமுற்றுகள் ஐம்பால் மூவிட ஈரெண்கட்கும் பொதுவாம்.

உண்டு (உள் + து) என்னும் ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்று ஐம்பால் மூவிட ஈரெண் பொதுவினையாக வழங்கிவருவது வழுவமைதியாகும்.

அன்மை குறிக்கும் குறிப்பு வினைமுற்று, யான் அல்லேன், யாம் அல்லேம் (நாம் அல்லோம்), நீ அல்லை (அல்லாய்) நீர் அல்லீர், அவன் அல்லன், அவள் அல்லள், அவர் அல்லர், அது அன்று, அவை அல்ல என இசைய வேண்டும்.