உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்றொடரியல்

யார் என்னும் வினாப்பெயர் உயர்திணை முப்பாற்கும் பொது. எ-டு: அவன், அவள், அவர் - யார்?

75

என் (எவன்) அல்லது என்னை என்னும் வினாச்சொல் அஃறிணை யிருபாற்கும் பொது.

எ - டு : அது, அவை - என் (எவன்)? என்னை?

என் என்பது ஒருமையில் என்னது என்றும், பன்மையில் என்ன அல்லது என்னவை என்றும் இருக்கும். என்ன என்பது ஒருமையில் வழங்குவது வழுவமைதி.

குலப்பெயர்களைத் தனித்தனி கூறும்போது, ஆண்பால், பலர்பால், பண்புப்பெயர் என்ற மூவடிவிலும் கூறலாம். இம் மூவடிவும் அஃறிணையே.

எ-டு : வேளாளன், வேளாளர், வேளாண்.

உயர்திணை எழுவாயும் அஃறிணை எழுவாயும் சேர்ந்து ஒரு முடிபுகொள்ளும்போது, உயர்திணை வினைகொண்டு முடியும். எ-டு : நம்பியும் நாயும் வந்தார்கள்.

உயர்திணை எழுவாய் இழிவு குறித்ததாயின், இருதிணை எழுவாய்களும் ஒரு முடிபு கொள்ளும் போது அஃறிணை வினைகொண்டு முடியும்.

எ - டு : பேதையும் நாயும் வந்தன.

இருதிணைப் பொருள் பல

விரவிவருமாயின்,

(பெரும்பான்மை) பற்றி ஒருதிணைவினை கொண்டு முடியும்.

மிகுதி

எ - டு : அரசன், ஆசிரியன், பாம்பு என்னு மிவரை இளையரென் றிகழக் கூடாது.

பெற்றோர், தாய்மொழி, தாய்நாடு என்னு மிவற்றைப் போற்றல் வேண்டும்.

வெவ்வேறு சிறப்பு வினைகட்குரிய பல பொருள்களின் பெயர்கள், தனித்தனியாகவேனும் தொகுதியாகவேனும் கூறப்பட்டு ஒருவினை கொண்டு முடியின், பொதுவினை கொண்டு முடியும்.

எ - டு : பாலும் சோறும் பலகாரமும் தேனும் உண்டார்கள். நால்வகை யுண்டியும் உண்டார்கள்.

பாலும் சோறும் தின்றார்கள் (அல்லது பருகினார்கள்) என்பது தவறு.