உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




viii

கட்டுரை வரைவியல்

கற்பிப்பின், மாணவர்க்குப் பயன்படுமென்றெண்ணி, பல ஆண்டுகளாக ஆயத்தம் செய்து இந்நூலைஎழுதத் துணிந்தேன். மாணவர் பிழைகள் பெரும்பாலும் எழுத்துப் பிழையும் சொற்பிழையுமாயிருத்தலின், அவற்றை நீக்குவதற்குப் பல வழிகள் இந் நூனெடுமையுங் கையாளப்பட்டுள. எடுத்துக் காட்டாக, ரகர றகர வேறுபாடுகளையும் வலிமிகும் இடங் களையும் நோக்குவார்க்கு இவ்வுண்மை எளிது புலனாகும்.

இப்பதிப்பில் பல திருத்தங்களும் பல புதுச்சேர்க்கைளும் நிகழ்ந்துள்ளன.

மாணவர் மனத்தில் அழுந்தப் பதியுமாறும் அவ்வப்பகுதிக் கேற்றவாறும் ஆங்காங்கு வழிமொழிதலாகவுள்ள சில சொற்களும் சொற்றொடர்களும் கூறியது கூறலாயின. அறிஞர் அதனைப் பொறுத்தருள்க.

இப்புத்தகத்தின் திருத்தம் பற்றி கருத்துக்களை எவரேனும் தெரிவிப்பின், அவற்றை நன்றியறிவுடன் அடுத்த பதிப்பிற் பயன்படுத்திக் கொள்வேன்.

சென்னை

20.1.1944

ஞா. தேவநேயப் பாவாணர்