உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்றொடரியல்

vii. திசைச்சொல் நடை

திசைச்சொல் நிரம்பி வருவது.

83

எ-டு: நேற்று நீ இருந்த இலக்கிலே ஓர் இளவட்டம் நின்று கொண்டிருந்தான். (நெல்லை வழக்கு)

அவன் சிக்காமை யால் அவனைத் துழாவிக்கொண்டு எனக்குப் புறனே வந்தார்கள். (சேலம் வழக்கு).

viii. கொச்சை நடை (Barbarism)

கல்லா மக்கள்போற் பேசுவது கொச்சை நடை.

எ - டு : அவங்க வூட்டுக்குப் போகச்சே நல்லா விடுஞ்சு போச்சு.

ix. செய்யுள் நடை அல்லது எதுகை நடை

,

எ - டு : அவளும், உடன்பிறந்து உடன் வளர்ந்து, நீர் உடனாடிச் சீருடன் பெருகி, ஓல் உடனாட்டப் பால் உடனுண்டு, பல்உடனெழுந்து சொல் உடன்கற்று, பழமையும் பயிற்றியும் பண்பும் நண்பும் விழுப்பமும் ஒழுக்கமும் மாட்சியும் உடையார், பற்பன் னூறாயிரவர் கண்ணும் மனமும் கவரும் ஒண்ணுதன் மகளிர் தற்சூழத் தாரகை நடுவண் தண்மதி போலச் செல்வாளென்பது முடிந்தது.’

x. இலக்கிய நடை

இறையனா ரகப்பொருளுரை

கற்றோர்க்கு மட்டும் விளங்குமாறு உயர்ந்த சொற்களும் சொல் வடிவங்களும் விழுமிய கருத்துகளும் அமைந்திருப்பது இலக்கிய நடை.

6 6

எ-டு : ஒரு பெண்டாட்டி தமரொடு கலாய்த்து, நஞ்சுண்டு சாவலென்னும் உள்ளத்தளாய் நஞ்சு கூட்டிவைத்து, விலக்குவா ரில்லாதபோழ் துண்பலென்று நின்றவிடத்து, அருளுடையா னொருவன் அதனைக் கண்டு அவளைக் காணாமே கொண்டுபோ யுகுத்திட்டான். அவளுஞ் சனநீக்கத்துக்கண் நஞ்சுண்டு சாவான் சென்றாள், அது காணாளாய்ச் சாக்காடு நீங்கினாள். அவன் அக் களவினான் அவளை உய்யக்கொண்டமையான் நல்லுழிச் செல்லும் என்பது.

இறையனா ரகப்பொருளுரை