உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

V. தனித்தமிழ் நடை

கட்டுரை வரைவியல்

அயற்சொற் கலவாது தனித்தமிழில் (இலக்கணப் பிழையின்றி) எழுதுவது தனித்தமிழ் நடை.

'கபிலரகவல் எளிய தமிழ்நடையில் இயற்றப்பட்டிருத்தல் கொண்டும், கபிலர்க்குப் பூணூல் இட ஒருப்படாத பார்ப்பனக் குழுவினர்க்கு அறிவு தெருட்டல் வேண்டிச் சிறு பிள்ளையாயிருந்த கபிலர் இதனைச் செய்தார் என வழங்குங் கதை நம்பத்தகாததாயிருத்தல் கொண்டும், இது கபிலராற் செய்யப்பட்ட தன்றென்றும், இஃதொரு "கட்டுநூல்” என்றுங் கூறினாருமுளர். இக் கபிலரகவல் இயற்றப் பட்டதற்குக் காரணங்கூறுங் கதை நம்பத்தகாததுபற்றி இந் நூலையே கட்டு நூலென்றல் ஆராய்ச்சி யுணர்வில்லாதார் கூற்றாகும்.”

vi. இலக்கண நடை

ஆசிரியர் மறைமலையடிகள்

பெரும்பாலும் பிறமொழிச்சொற் கலவாது இனிய இலக்கணத் தமிழில் எழுதுவது இலக்கண நடை.

-

ம்

டு: "இளைஞர்களே! உங்கள் தமிழ்த்தாய் நேற்றுப் பிறந்தவ ளல்லள்; இன்று பிறந்தவளல்லள். அவள் மிகமிகத் தொன்மையுடையவள்; கலைகளையுடையவள். அவளையா கொல்வது? தாய்க்கொலை புரிவதா தமிழர் வீரம்? வீரத்துக்குரிய உங்கள் இளமுகம் நோக்கிக் கேட்கிறேன், நேற்றும் இன்றும் பிறந்த நாடுகளையுங் கலைகளையு ஓம்பவும் பெருக்கவும் அவ்வந் நாட்டார் முயன்று வருகிறார். நாமோ பாவிகளாகிய நாமோ - பழம்பழம் பெருநாட்டை மறைக்கப் பார்க்கிறோம். தமிழ் இறந்த பின் 'தமிழ் மண்'மட்டு மிருந்தென்? மொழி யன்றோ நாடு? கலைகளல்லவோ நாட்டின் உயிர்? மொழியிறந்து படின் நாடும் இறந்துபடுமன்றோ? உலகிற்கே ஒருபோது நாகரிகத்தை வழங்கிய மாண்பு வாய்ந்த ஒரு பெரும் நாட்டையா மறப்பது? அதனையா மறைப்பது? ஈழத் திளைஞர்களே! தமிழுலகின் இழிந்த நிலையை ஓருங்கள்; ஓர்ந்து உங்கள் பொறுப்பை யுணருங்கள்; தமிழ்த் தாயைப் புதுப்போர்வையால் ஒப்பனை செய்து, அரியாசனத் தமர்த்தச் சூள்கொண்டெழுங்கள்; எழுங்கள்; பழந்தமிழ் வீரத்துடன்

எழுங்கள்”

சீர்திருத்தம், (திரு.வி.கலியாணசுந்தர முதலியார்)