உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்றொடரியல்

81

எ-டு : “சிறுகுழந்தை ‘குறுகுறு நடந்து சிறுகை நீட்டிக்' காக்கையைப் பிடிக்கப் போகிறது. குழந்தையின் கை தனது முதுகிற்படும் வரையும் அசையாமலிருந்த காக்கை, மெல்லென எழுந்து ஒரு பாகந் தள்ளி உட்காருகிறது. குழந்தை மீட்டுந் தொடர்ந்து தொடப் போகுஞ் சமயத்திலே, இன்னு மொரு பாகந் தள்ளி உட்காருகிறது. குழந்தையும் காக்கையும் நண்பர்கள்.” விபுலானந்த அடிகள்

iii. கொடும்புணர் நடை

எல்லாச் சொற்களையும் புணர்த்தெழுதுவது கொடும்புணர் நடை. எ-டு : “நான்றென்காட்டின் மேய்ந்து கொண்டிருக்கையிற் கேளுங்க ளொரு கிழப்புலி பலவீனத்தா லாகாரஞ் சம்பாதிக்கக்கூடாம லோரேரிக் கரையி னீராடிக் கையிற் றர்ப்பை வைத்துக்கொண் டுட்கார்ந்திருந்தது.'

iv. மணிப்பவள நடை

-

பஞ்சதந்திரம்

வடசொற்களையும் தென்சொற்களையும் கலந்தெழுதுவது

மணிப்பவள நடை.

1) தற்சம மணிப்பவளம்

எ-டு: "மணவாளமாமுனிகள் தமக்காசார்யரான பிள்ளையுடைய ப்ரஸாதத்தாலே, க்ரமாகதமாய் வந்த அர்த்த விசேஷங் களைப் பின்புள்ளாரு மறிந்து உஜ்ஜீவிக்கும்படி, ப்ரபந்த ரூபேண உபதேசித்து ப்ரகாசிப்பிக்கிறோமென்று ச்ரோத்ரு புத்தி ஸமாதாநார்த்தமாக ப்ரதிஜ்ஜை பண்ணி யருளுகிறார்.”

2) தற்பவ மணிப்பவளம்

எ - டு : "பிரகிருதி எ-டு:

=

உபதேச ரத்நமாலை

மாயையினின்றுஞ் சிருட்டிமுறைபற்றிக் குணதத்துவ முதல் வைத்தெண்ணப்படும் போக்கிய தத்துவ மிருபத்து நாலுந் தோன்றும். இங்ஙனஞ் சடரூபமான விந்து மோகினி மான் மூன்றுந் தத்தங் காரியங்களைச் சிவசத்தி சங்கற்பரூப சந்நிதியினின்றுந் தோற்றுவிக்கும். ”

சிவஞான சித்தி உரை