உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

கட்டுரை வரைவியல்

அஃறிணைப்பால் ஐயவினாவைப் பால்பகா அஃறிணைப்

பெயரும் முடிக்கும்.

எ-டு : ஒன்றோ பலவோ அவன் கொண்ட புத்தகம்?

இருதிணையிலும்,

ஆண்மை பெண்மைபற்றிய ஐய

w

வினாவைப் பொதுச் சொல்லும் முடிக்கும்.

2.

எ - டு : ஆடவனா பெண்டா அவ் ஆள்?

காளையா ஆவா அம் மாடு?

பாகியமைப்பு (Structure of Paragraph)

ஒரு பாகி, ஒரே ஒரு குறிப்பை அல்லது கருத்தைத் தழுவிய தாய், எவ்வகையிலும் காற்றாளில் ஒரு பக்கத்திற்கு மிகாததாயிருத்தல் வேண்டும். பாகிப்பொருள் (Theme of Paragraph) முதலிலேனும் டையிலேனும் கடையிலேனும், குறிப்பாகவேனும் வெளிப்படை யாகவேனும் இருக்கலாம். முதலிலிருப்பதும் வெளிப்படை யாயிருப்பதும் சிறப்பாகும். பாகிப்பொருள் பெயரளவாயில்லாது முழுச்சொற்றொடரா யிருத்தல் வேண்டும். ஒரு பாகி ஒரு சொற்றொடராயேனும் பல சொற்றொடராயேனு மிருக்கலாம்; பத்து வரிக்கு மேற்பட்டதாயின் பல சொற்றொடரா யிருத்தல் நலம். பாகி யெனினும் பத்தி யெனினும் ஒக்கும்.

3.

நடை (Style)

உரைகள் அல்லது எழுத்தீடுகள் சொற்போக்கும் வமைதியும்பற்றிப் பல நடையாகச் சொல்லப்படும்.

i. வெள்ளை நடை

எல்லார்க்கும் எளிதாய்ப் பொருள் விளங்குவது வெள்ளை நடை. எ-டு : ஒரு செலவாளி ஒரு சிக்கனக்காரனைக் கடன்கேட்டான். “நீ எப்படிக் கடனைத் தீர்ப்பாய்?” என்று சிக்கனக்காரன் கேட்டதற்கு, “என் மாதச் சம்பளத்திலிருந்து கொஞ்சங் கொஞ்சமாய்க் கொடுத்துத் தீர்ப்பேன்” என்று செலவாளி சொன்னான்.

ii. ஒழுகிசை நடை

ஆற்றொழுக்குப் போல் தட்டுத் தடையின்றித் தொடர்ந்து செல்வது ஒழுகிசை நடை.