உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்றொடரியல்

xix. வினாமரபு

79

ஒரு பொருளைப்பற்றி வினாவும்போது, அப்பொருளைக் குறிக்குஞ் சொன்மேல் வினாவெழுத்திருத்தல் வேண்டும்.

எ-டு டு : கண்ணனா வந்தான்? - ஆள்

கண்ணன் நேற்றா வந்தான்? - காலம்

கண்ணன் நேற்று என்னிடமா வந்தான்? - இடம்

ஐயமும் சினமும்பற்றிய வினாவில், முறையே சிறிதறியப் பட்ட பொருளும் உண்மைப் பொருளும் முன்னர்க் கூறப்படல் வேண்டும்.

எ - டு : அவ் வுருவம் மாந்தனா? மரமா? - ஐயம் நீ மாந்தனா? மாடா? - சினம்

ஒரு பொருளைப்பற்றி உடன்பாட்டுச் சொல்லும் எதிர்மறைச் சொல்லும், அல்லது நன்மைச் சொல்லும் தீமைச்சொல்லும் அடுத்தடுத்து வினாவாய் வரின், உடன்பாட்டுச் சொல்லும் நன்மைச் சொல்லும் பொதுவாக முன்னர்க் கூறப்படும்.

எ-டு: தமிழ்நாட்டிற்கு இந்தி வேண்டுமா? வேண்டாவா? சூழ்ச்சியத்தினால் (எந்திரத்தினால்) நன்மையா? தீமையா?

வினவுவான் குறிப்பின்படி, எதிர்மறையும் தீமையும் உண்மை யாயின், அவற்றைக் குறிக்குஞ் சொற்கள் முன்வரலாம்.

ஒரு சொற்றொடர் எந்தெந்த, என்னென்ன என்று தொடங்கி னால், அதன் பிற்பகுதியும் அந்தந்த, அன்னன்ன என்று இரட்டித் திருத்தல் வேண்டும்; அந்த, அன்ன என்று ஒற்றித்திருப்பது தவறு.

ஐயவினா : திணை தெரிந்து பால் தெரியாத பொருள்களையும், பால் தெரிந்து எண் தெரியாத பொருள்களையும்பற்றி, ஐயுற்று வினவும்போது, பன்மைச் சொல்லால் முடிக்கவேண்டும்.

1

டு : ஆடவனா பெண்டா அங்குத் தோன்றுபவர்? - பால்ஐயம்

ஒருவனா பலரா இதைச் செய்தவர்? ஒன்றா பலவா இங்கு விழுந்தவை?

எண் ஐயம்

உருவம் என்னும் சொல், திணை பால் ஆகிய இரண்டும் பற்றிய ஐயவினாக்களை முடிக்கும்.

எ-டு: மாந்தனா மரமா அவ் வுருவம்?

ஆடவனா பெண்டா அவ் வுருவம்?

ஒன்றா பலவா அவ் வுருவம்?