உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

கட்டுரை வரைவியல்

ஒரு சொற்றொடரில், உம்மை யேற்று ஒரு முடிபு கொள்ளும் சொற்கள் அல்லது சொற்றொடர்கள் எல்லாம் ஒரு வடிவினவா யிருத்தல் வேண்டும். (இங்கு ஒருபோகமைப்பை நினைக்க).

எ-டு : பாண்டித்துரைத்தேவர் ஓர் அரசரும் புலவரும் வள்ளலுமா

யிருந்தார்.

ஒட்டக்கூத்தர் குலோத்துங்கச் சோழனுக்கு ஆசிரியராயும் அமைச்சராயும் புலவராயு மிருந்தார்.

ஆசிரியராயும் அமைச்சருமாய் என்பது தவறு.

ஆவதும்மை : சிலவிடத்து உம்மைச் சொல் ஆவது (either... or) என்னும் பொருள்பட வருவதுண்டு.

எ - டு : ஆமை நிலத்திலும் நீரிலும் வாழும்.

முற்றும்மை : ஒரு வகுப்புப் பொருள்கள் எல்லாவற்றையும் வினையுடன் கூறும்போது, உம்மை கொடுத்துக் கூறவேண்டும்.

எ - டு : இருகண்ணுஞ் சிவந்தன. மூவுலகுந் தொழும் முனிவன்.

முற்றும்மைத் தொடரின்பின், அத் தொடர் குறிக்கும் வகுப்பின் ஒரு குறிக்கும் தொடர்ச்சொல் ‘உம்மை’

பகுதியை பெறாது.

விதந்து

எ-டு : தமிழ் மாணவரெல்லாம், சிறப்பாய்த் தனித்தமிழ் உரைநடை பயில்வார், ஆசிரியர் மறைமலையடிகள் எழுதிய நூல்களைப் படித்தல் வேண்டும்.

உம்மைத் தொகை : உயர்திணைப் பெயர்த்தொடர்கள் உம்மைத் தொகையாய் வரும்போது, இறுதியிற் பலர்பால் ஈறு பெறும்.

எ - டு : கபிலபரணர், சேரசோழபாண்டியர்.

உயர்திணைப் பெயர்கள் உம்மைத் தொகையாக வழங்கிவரும் இணைமொழிகளாயின், இறுதியிற் பலர்பால் ஈறு பெற்றும் பெறாதும்

வரும்.

எ - டு : தாய்தந்தை, தாய்தந்தையர்.

இங்ஙனமே, அஃறிணைப் பெயர்களும் உம்மைத் தொகை யான இணைமொழிகளாயின், இறுதியிற் பலவின்பால் ஈறு பெற்றும் பெறாதும்

வரும்.

-

டு : இராப்பகல், இராப்பகல்கள்; காய்கறி, காய்கறிகள்.